எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

அனலென காமம்




•அனலென காமம்
கனலென காதல்
மணல் திரித்த மஞ்சள்
கழுத்தில் முடிந்த கதையுது.

•கங்கையெனன காதல் இது.
எங்கு பொங்குது?எத்துணை பொங்குது?
பாவமெது?மோட்சமெது?
மங்கை மிதக்கும் பாற்கடலோ?

•உள்ளங்கால் பிடித்த போது,
உச்சி முகர்ந்த போது,
உதடு முத்தமிட்ட போது,
உணரவில்லை., பொய்யென இவை.

•ஒலிக்கவேண்டிய மேளம் - எனக்கு
ஒப்பாரியாய் ஏன் அழுகிறது?
விழித்திருக்க வேண்டிய இரவு - ஏன்
சுருண்டு இருண்டிருக்கிறது?

•நீயும்,நானும் சமைப்போம்.
ரசமெல்லாம் இனிக்கும்.
பிசைந்து ஊட்டும் போது
புளிப்பு ஏது? புலன் ஏது?

•எனக்கான மஞ்சள் நீர்த்தோ?
உனக்கென நீராடிவிட்டாய்.
வெற்றிடம் வெல்லும் காற்றென
வியாப்பித்துவிட்டாய் மனமெங்கும்.


மு.கேசவன்
2009-04-01