எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Turritopsis nutricula: World's only 'immortal' creature

Jellyfish usually die after propagating but Turritopsis reverts to a sexually immature stage after reaching adulthood and is capable of rejuvenating itself.Marine biologists say the jellyfish numbers are rocketing because they need not die.

The 4-5mm diameter creature, technically known as a hydrozoan, is the only known animal that is capable of reverting to its juvenile polyp state.

Theoretically, this cycle can repeat indefinitely, rendering it potentially immortal.

The jellyfish are originally from the Caribbean but have spread all over the world. Found in warm tropical waters Turritopsis is believed to be spreading across the world as ships’ ballast water is discharged in ports.

Though solitary, they are predatory creatures and mature asexually from a polyp stage.

The jellyfish and its reversal of the ageing process is now the focus of research by marine biologists and geneticists. It is thought to achieve the feat through the cell development process of transdifferentiation, in which cells transform from one type to another.

The switching of cell roles is usually seen only when parts of an organ regenerate. However, it appears to occur normally in the Turritopsis life cycle.

Wiki : http://en.wikipedia.org/wiki/Turritopsis_nutricula

Thanks:
  • timesonline.co.uk
  • emilydamstra.com
  • telegraph.co.uk
  • paleobio.org
  • zmescience.com

New "Rainbow Glow" Jellyfish Found

March 16, 2009—Look on the bright side—this luminous new jellyfish species doesn't sting.

Jellyfish expert Lisa Gershwin caught the unnamed species in early March while swimming near a jetty off the Australian island of Tasmania with a "phototank"—a small aquarium that makes it easy to photograph sea life.

The jellyfish does not emit its own light, as bioluminescent creatures do. (Related: "Monster Glowing Squid Caught on Camera.")

Rather, its rainbow glow emanates from light reflecting off the creature's cilia, small hairlike projections that beat simultaneously to move the jellyfish through the water.

(See a blue jellyfish swarm photo taken in Australia.)

Though the glowing jelly is Gershwin's 159th species discovery in Australia, she still finds the discovery "simply splendid."

For one, the jelly is relatively large—5 inches (13 centimeters) long.

The new species also belongs to Ctenophora, a "strange and poorly known" group of animals, said Gershwin, curator of natural science at the Queen Victoria Museum and Art Gallery in Tasmania.

The invertebrate is also incredibly fragile—it shatters as soon as it touches a net, she said.

"So it begs the question," Gershwin said by email, "of how many fragile species are out there, right under our noses, that we have overlooked. … "

—Christine Dell'Amore

Photograph courtesy Martin George/QVMAG

Thanks: National Geographic News
http://news.nationalgeographic.com/news/2009/03/090317-new-rainbow-jellyfish-picture.html?source=email_wn_20090320&email=wn

வந்தான் குகன்





  • அன்னமிடச் செய்தாள் - என்னை
    அண்ணனாக்கிக் கொண்ட வள்
    பின்னும் என்னடி ஊடல்- உன்
    மன்னவன் தேடி வந்த வேளையில்?
  • கைப்பிடித்து வந்தவன் - உள்ளங்
    கால் பிடித்தும் விடுவாள்
    தோள் சாயும் சமயம் - நான்
    தாழ் சேர்ந்து போவேனோ?
  • அன்னை உண்டு அருகில்
    அண்ண னழைப்பான் தொலைவில்
    நங்கைக் குண்டோர் நல்லூர்
    மங்கை மடிசாயும் கரைக்காற்று.
  • தாலிக்கு துடிக்கும் கழுத்து,
    தோழிக்கு துப்பட்டா எதுக்கு?
    நாழிக்கு உண்டோ பொறுமை?
    தாழிக்குள் திமிறும் காதல்.
  • திருநாள் வருடமும் உனக்கு.
    இருநா ளென அதை செய்குவோம்.
    வரும்நா ளெல்லாம் வசந்தமே,
    வருவான் நீயும் விழித்திரு

கங்கையின் துளிகள்





  • நீ இரசிக்கும் மட்டும்
    என் எழுத்துக்கள்.
  • பிழைகள் முழுதும்
    எனதாகிறது.
    திருத்தம் மட்டும் உனது.
  • என் கற்பனை கங்கையின்
    துளிகள் முழுதும் - உள்
    நீந்தும் மீன் - நீ
    எப்படி பருககூடும்?
  • நதியின் பல துளிகள்
    துளியின் ஒரு சிதறல்.
    சிதறல் ஊடுருவும்
    வானவில் நீ.
  • துளிகள் சிதறினும்
    வண்ணங்கள் குன்றா
    கவிதை நீ.
  • என் ஞாபகமாக
    நீ பறித்துக்கொண்ட
    எழுத்துக்களை
    பகிர்ந்துகொடு
  • அவை எனக்கும்
    பங்குண்டு.

ஒரு மல்லி சூடவில்லை





  • ஒரு மல்லி சூடவில்லை
    ஒரு மல்லி கசங்கவில்லை
    ஒரு புடவை கூடவில்லை
    ஒரு புடவை களையவில்லை
  • அன்னம் பால் ஊட்டவில்லை
    கிண்ணம் தேன் சுவைக்கவில்லை
    எண்ணம் எங்கும் காதல்
    தின்னத் தோனும் காமம்.
  • விருந்தினர் வாராத நமதில்லத்தில்
    வெறுந்தரையில் நாம் காதலிப்போம்.
    எனை நீராட்ட முயற்சித்து
    உனை குளிப்பாட்டிக் கொள்வாய்.
  • ஒருதட்டில் பசியாருவோம்
    நான் புசித்திருக்க நீ கையலம்புவாய்
    நீ புசித்தவுடன் நான் விரல் கட்டே
    போட்டுக்கொள்வேன்.வலியில்லை.
  • ஒரு போர்வைக்குள் இருதூக்கம் எப்படி?
    சிறு குழந்தையென வினவுகிறாய்.
    ஒருபோர்வைக்குள் எதுக்கடி தூக்கம்?
    பெருங் குறும்புகள் புரிவோம் வா.,
  • வடிந்தவுடன் முடிந்துவிடும் காமமன்று
    விடிந்த பின்னும் ஓடும் காதல்நதி நமது
    ஒடிந்தாலும் மணம்வீசும் முல்லை நீ.
    கருகியும் காதல் விதை பரப்புகிறாய்.
  • "என்னென்ன பிடிக்கும் உனக்கு?"
    என்னவன் உன்னை மட்டுந்தான் எனக்கு.
    பின்னெங்கடி போனாய் தவிக்கவிட்டு.
    விண்ணோடும், மண்ணோடும் என் செய்வேன்?
  • என்னோடு வருவேன் என்றாய்.
    எமனோடு எங்கு போகிறாய்?
    நரகத்தில் நான் துவழ,
    சொர்க்கத்தில் என்னடி செய்கிறாய்?
  • நான் காத்திருக்க வருவாய் குவளைபாலோடு.
    ஏன்?சொர்க்கத்தில் நடக்கும் இரவுக்கு
    முந்திக்கொண்டு நீயும் காத்திருக்கிறாய்.
    பிந்தியும் வருவேன் நான்,அந்தி சாயும்.
  • பன்னீரில் தான் உனை நீராட்டுவேன்-சொட்டும்
    நன்னீர் கருங்கூந்தலில் முகம் புதைவேன்.
    வெந்நீர் மலர்மேனிக்கு வேதனையோ?
    கண்ணீருக்கென கண்களும் வரண்டதடி.
  • பாவை யெல்லாம் இனித்தது-தேன்
    பாகு கூட கசக்குது
    போடி நீயும் முன்னால்-வருவேன்
    பேடி நானும் பின்னால்.

December மலர்





  • எனக்கென பூத்த
    December மலர் - இந்த
    காதல் தினத்தில்
    காணாமல் போய்விட்டது.
  • பாலையினும் பிரியோய், - பனை
    ஓலையில் வருகிறாள் - சிறு
    பாடையில் போகிறாள்.
  • பிறக்கவிருந்த
    எட்டு பிள்ளையில்
    எந்த பிள்ளை கொள்ளிவைத்தான் ?
    எந்த பிள்ளை உரிவுடைத்தான்?
  • ஒற்றை ரோஜா உத்தேசித்திருந்தேன்
    மாலை ரோஜா பெற்றுக்கொண்டாய்.
    அத்துனை காதல்,என் மேலா?
  • எனக்கும் அரசியானவள்
    இனிக்கும் அரசிலானவள்
    வாய்க்கரிசி வாங்காது போகிறாள்

  • ஊதா புடவை உனக்கு
    எடுப்பென்றேன் - உன்
    உயிரை எடுக்குமென்றா?இல்.
  • உனக்கென கொண்டுவருகிறேன்.
    புடவையொன்று.சட்டம்போட்ட
    உன் நிழலுக்கும் அது
    எடுப்புதான்.
  • விடுதலையை நீஎடுத்துவிட்டு
    ஆயுட்சிறையை எனக்கொடுத்துவிட்டாய்.
    விருப்பந்தான்.
  • கேள்விமட்டுங் கொண்ட
    விநோத விடைதாளிது.
    எனக்கென இல்லாது-[மதிப்பெண்]
    நூறும் பெற்றுக்கொண்டாய்.
  • காப்பேனென கரம்பிடித்தாய்.
    காமமென சிறையாமர்ந்தாய்.
    காணோனென பறந்துவிட்டாய்.
  • ஒரு சிறுமலர் தான் என்காதல்.
    பட்டென மொட்டு வெடித்தாய்.
    வனமெங்கும் காதல் வீசுகிறது.
  • புத்தாண்டில் மொட்டுஇட்டு,
    Decemberல் பூத்து,
    காதல் தினத்தில் கருகிவிட்ட - என்
    December மலரே.,
  • என்னை
    சுவாசித்து,வாசித்து,நேசித்த
    December மலரே.,
  • எப்படியுரைப்பேன்?
    வனமெங்கும் வாசம்.
    துளித்தேனை தேடுகிறேன்.

சுற்றம் என்று சூழும் ?





  • குச்சு கட்டியவன் ஒருவன் கண்
    வச்சு காத்தவன் மருவன் - கை
    பிடிச்சு வந்தவன் இவனே வெண்
    பிச்சி கொண்டு வருவானோ?
  • வெட்கம் வந்த நேரம் - என்
    பக்கம் கூற மறந்தாள் - புது
    சொர்க்கம் கண்ட பின்னும் இவள்
    தர்க்கம் இனி எங்கு வெல்லும்?
  • குத்தும் என மழித்தான்
    குத்தம் என மறுத்தாள்.,
    பத்தும் மிவள் மறக்கவேண்டும்.,
    சுற்றம் என்று சூழுமோ?
  • புன்னை யாக்கி விட்டாள் என்னை
    தன்னை மறக்கும் தமக்கை.
    பின்னும் ஊறும் தமிழ்., ஆதவன்
    கன்னி கூட ஆகும் எட்டு திங்கள்.,


[தமக்கைக்கு.,]
மு.கேசவன்
2008-12-31

பொங்கல்






பால்காரனையும் பேப்பர்காரனையும்
திட்டியபடி விரட்டிக்கொண்டே
நைட்டியரின் கட்டை இடுக்கில்
கலர்கலராய் புலர்ந்தது,இந்த பொங்கல்.

LPG gas'ன் Pressure குக்கரில்
கொதித்துக் கொண்டிருந்தது.
கதிரவனின் தீட்டுக்குள் , Apartment மூலையில்
Boostடோடு இந்த சர்க்கரைப் பொங்கல்.

குளத்தாங்கரையில் குதிக்கவில்லை,
ஆற்றுக்குள் சைக்கிள் சுத்தவில்லை,
நாலடி பாத்ரூமின் சுவரின்
வெண்ணீர்க் குளியலில் நான்

பனங் கொழுக்கட்டையில்லை
குழி பனியாரமில்லை - பரவாயில்லை
Bakery Cake சுவைதான்.

மாந்தோப்பில்லை, ஆவாரம்பூவில்லை
வாழைத்தோட்டம் போகவில்லை, - அட
வயற்காடே பார்க்கவில்லை - அதற்குள்
பொங்கிவிட்டது, எங்கள் பொங்கல்.,

உங்களோடு பொங்கல் - மிரட்டியது
எங்கள் தொ(ல்)லைக்காட்சி.
"கண்களோடு காதல்" - மும்பை
கதாநாயகி 'கரும்பு'கிறார்.

பட்டணத்து சென்னையட இது.
பொட்டி முன் பொங்கலிடும்.
வெட்டவெளி கண்டதில்லை - மாரில்
கோட்டுசூட்டு பூட்டும் கொள்கைதான் என்னட?

பட்டியால குர்தா தேடும் இவள்
பட்டியலில் இல்லையோ தாவணி?
ஒட்டுபொட்டு வடிவம் கண்டு
சட்டிமுட்டாது இந்த தைப்பொங்கல்.,

வண்ணத்து கோலம் நடுவில்
எண்ணத்து பூசணி மலர்வாள்.
கிண்ணத்து மஞ்சள் எடுத்து
என்னைத் தோடுவார் இங்கு யாரோ?

சரி, நாம் கிளம்புவோம்






மலர்ந்த வெண்முல்லையோ ? பாறையை
பிளந்த கார் பனித்துளியோ? அச்சு
கரிந்த கயல் விழியோ ? - ஆங்கு
பணிந்த யான் , சிறு பரியோ?

சிவந்த இதழ் உனதோ ? - அதை
சிவக்க செய்தது எனத ன்றோ?
பரந்த மார் எனதோ ?- அதில்
படர்ந்த கொடி நீ யன்றோ?

புடவை எது எனக்கு அழகென்கிறாய்
புடவை எல்லாம் அழகை மறைக்குமென
உண்மையை நான் உளறினால்
உனக்கேன் வரும் பொய்க்கோபம்?

கட்டுபுத்தகம் மொத்தம் - என் மேல்
கொட்டி கொண்டு சிரிக்கிறாய் -பாவம்
தட்டு தடுமாறி வீழ்வேன் - உன்மேல்
விட்டு விலகி விளையாடாதே.,

நீ பேச ஆரம்பித்த முதற்சொல்- "சரி,
நாம் கிளம்புவோம்" அழகான பொய்யது.
நாழி கழிந்தது, நாளும் கழிந்தது,
நாம் மாறவில்லை. மீண்டும் பொய்க்கிறாய்
"சரி, நாம் கிளம்புவோம்"


மு.கேசவன்
2009-01-[16…23]

மல்லபுரத்து உரையாடல்.,







  • வெயில் உரைப்பதில்லை.,
    தேகம் கருப்பதில்லை.,
    தாகம் தவிக்கவில்லை.,
    உன்னோடு உரையாடிய
    மல்லபுரத்து மணல்.,


மு.கேசவன்
2008-12-30

திங்கள் சூடும் மல்லி






கொங்கையை கொண்டாடுபவன் நானோ?
கங்கையென ஊறும் காமமிது
நங்கை நின் பால் - நான்
திங்கள் சூடும் மல்லி தற்று.

ஆறாம் விரல்






  • ஆறாம் விரல்
    இருந்திருந்தால் நன்றாயிருக்கும்
  • நேற்று நான்
    வாங்கிய முத்தத்தில் ஒன்று
    கூடியிருக்கும்

  • மு.கேசவன்
    2008-08-11

விரல் மீட்டிய காதல் ராகம்






  • எனக்குள் இருந்த
    வீணை நேற்று
    மீட்டெடுக்கப்பட்டது.
  • உன் மடியமர்ந்த
    புது வீணை நான்.
    காதல் ராகம் - நீ
    வாசிக்கிறாய்.
  • உன் விரல் மீட்டிய காதல் ராகம்
    உன் உதடு பதித்த
    ஈரத்தை உலர்த்திவிட்டு
    செல்கிறது . எங்கோ.,?

வழிசொல்வாய் நிதம்.






  • கட்டிவிட கேட்கிறது உன் கண்கள்
    கலைத்துவிட துடிக்கிறது என் கைகள்
    கட்டில் விலகாத இந்த காலை - என்
    கனவுகளை களவும் உன் சேலை.,
  • பசியென அழும் சிறுமழலை - நான்
    புசியென சொல்லாது பொய்யுரைக்கும் பெண்மை நீ
    தட்டுச்சோற்றில் தடுமாறும் தாபம் - உன்
    பட்டுவிரல் கடித்து பசியாரும்.
  • விடைபெறு மட்டும் வேண்டிநிற்கும்
    கடைசிபடி உன் காதல் முத்ததிற்கு.
    கண்ணத்து காதலெல்லாம் காட்சிமாறும் - அது
    வண்ணத்து பூச்சி கண்டு வழிமாறும்.
  • மறந்துவிட்டு சென்றிருப்பேன் மதிய உணவை
    தெரிந்தெடுத்து காத்திருப்பாய் கதவோரம்.
    வாரியணைத்து கட்டிக்கொள்வேன் - வந்து
    வாசற்கதவில் வழிசொல்வாய் நிதம்.

மு.கேசவன்
2008-12-25 20:41

என்னதான் பேசுவார்களோ ?






நான் எறியதிலிருந்து
என் முன் ஒரு ஜோடி.,
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.,

என்னதான் பேசுவார்களோ.,
கல்லூரியா யிருக்கும்., - இல்
காதலாகவு மிருக்கும்.

அவன் தோள் சாயவில்லை.,
அவள் கூந்தல் கோதவில்லை.,
என்ன ஜோடி இவர்கள்.,

புகைச்சல் தான் எனக்கு.,ஏன்
புரியவில்லை அவர்கட்கு?
கொஞ்சல் பேச்சும், குறும்பு புன்னகையும்.,

அடுத்த நிலையம் என் முறை.,
இன்னமும் பேசிக்கொண்டே .,

ஒரு கேள்வி
என்னிடம் மிச்சம்.,
எதற்கிந்த நெருக்கமான பயணம்?

அவரவர் கை பேசியில்
யவருடனோ., ஒருமணி
நேரம் வீணாய்?

ஒரு தேவதையின் கண்ணீர்






  • என் முன் ஒரு தேவதை
    அழுவதற்கு ஆயத்தமாகிறாள்
    அழகை இரசிப்பதற்கு நானும்.
  • இளம்தேவதைகள் என்றும் அழகு.
    இவள் இன்னமும்.
    சிரிப்பதற்கு சொல்லாத காரணம்
    அழுவதற்கு என்ன தேடுவாள்?
  • சுயநலம் கொண்ட என்
    கைக்குட்டை அவள்
    கண்ணீருக்கென காத்திருக்கும்.
  • வழிந்தோடும் கண்ணீரில்
    அவள் பெண்மை கொஞ்சி
    மிளிரும்.
  • சிரிக்கும் என் உதடு கண்டு
    பெண் சிணுங்கல்
    விம்மிப் பெருகும்.,
  • சிந்தும் கண்ணீரை - என்
    கைக்குட்டை சிறைகொண்டு
    உள்ளங்கையில் துள்ளும்!

    மு.கேசவன்
    2008-09-25

குமிழ் மட்டும் காமம்





  • நீர் சூழ்ந்த குமிழென
    ஆசைகள் சூழ்ந்த காதலில்
    நான் மிதந்து வந்தேன்.
  • உனக்கென கொண்டுவருகிறென்,
    கணக்கென கூடாத
    கட்டிலடங்கா காமங்கள்,
    பொத்திக்கொண்டு.
  • மட்டத்தின் மத்தியில்
    பட்டென தெறித்துவிடும்
    இந்த குமிழ்.
  • காற்றோடு கரையும் - என்
    வாசங்கள், - நீ இல்லை
    சுவாசிப்பதற்கு.
  • திசைகள் தேடியலையும் - இந்த
    களவுகள் என்
    கட்டி லில்லை.
  • குமிழ் மட்டும் காமம், - குங்குமச்
    சிமிழ் மாறும் தருணம் - இந்த
    காதல் மூழ்கிவிடும்.

துளித்துவிட்ட மேகம்






  • இவள் என் தேவதை.
    எனினும்,
    துளித்துவிட்ட மேகம்.

  • விரும்பிய நிலம்
    சேரும்
    நீர் அல்லாள்.

  • சேரும் நிலம்
    நிறம் மாறும்
    விதி இவள்தற்று.

  • வெட்கம் கொண்ட
    பெட்டையென,
    கண்ணீர் சிந்தும் மழையில்
    நான் நனைகிறேன்

நுணி மேலொரு பனி






விதவையாய் போய்விட்ட - என்
வெற்றுப்பக்கங்களை
வரிகள் கிறுக்கி
வளம் சேர்த்துவிட்டாள்

மழைத்த காலையின்
முளைத்த காளானென
உள்ளத்தின் காமம்
நட்டுவிட்டு போகிறாள்

பட்டுப்போன மரத்தின்
பொத்திவைத்த மொட்டுக்கான -நீர்
இட்டு காமம் வளர்க்கிறாள்

துளிர்க்கும் பச்சையென
பரவும் இச்சையுது.
காமத்தின் முத்தமென
நுணி மேலொரு பனி.

பொய்யுரைக்கும் தோழி







தொலைந்து விட்ட உன்
கடிகாரத்தின் நேரத்தில் என்
காலத்தின் சுழற்சி நின்றுவிட்டது

அழைத்துபேசிய மணியேசையில்
ஒளித்து விட்டு வைத்துபோகிறாள்.
யாழையும்,குழலையும்.

நிழலென ஒதுங்கிய மரத்தின்,
அலரென மலரென உதிர்க்கிறாள்.
சுழற்சியின் இளைப்பாறுதல் இவள்.

வளை கொண்ட கரம்
கலை மறந்த தென்ன?
"தலைவன் வருவா னென".

பொய்யுரைக்கும் தோழிகூற்று
நதியுறுஞ்சும் பாலையின்
காமத்தின் அனல்.




நதியோடு நாணல்
கொண்ட உறவு
உன்னோடு தோழி
நான்.,

மழைத்துளியின் வெள்ளமென
உன்னை இழுத்துக்கொண்டு நான்,
அப்படியே நிற்கிறாய்
நீ.,

ஓடும் பாதையாவும் பல
நாணல் சேர்த்துக்கொள்வேன்
நிற்கும் நாணல் உன்மேல்
மணல் வாரித்தூரிச்செல்வேன்

நாணல் பல கண்டேன்
உன் போல் ஒன்று
இல்லை தோழி
கானல் நீரும் நீதான்
கண்டு கொண்டேன், வாழி.

ஓடும் நதி நான். உன்னை
தொலைத்துவிட்டேன் தோழி.
தேடும் விழிகள் உனக்கு
தெரிந்தும் கடந்தேன் நான்.


நதியென பிறந்துவிட்டேன்-நீ
நாணலென நிற்பதற்கில்லை
சதிகள் செய்யும் விதிகள் இது.
கதி யறியேன் சேடி.

கடல் கரைந்துவிட்டேன்
என் கண்ணின் நீர்
அறிவார் யார்? சொல்லடி!

பூக்களை எப்போது ஏமாற்றினாய்?






நீ தாவணியிட்டு வந்த
நாளெல்லாம் என்னால்
பூக்களை இரசிக்க முடியவில்லை.

உன்மேல் கோபம் கொண்ட
பூக்கள் என்னைத்தான்
திட்டுகின்றன. மலரை
எப்போது ஏமாற்றினாய்?

ஏகபத்தினி விரதன் வேண்டி
நீ இராமன் காண்கிறாய்.
சீதைக்குதானே தெரியும்,
இராமனின் சஞ்சலம்.
சீதைக்கும் எதிரி - நீ.

நீ தூதுசென்ற காதல் எல்லாம்
பாதி பிரிந்த கதை தெரியுமா?
கானும் கண்கள் யாவும் - உன்னை
கண்டு காதல் கொள்ளும் போதுமா?

போகும் பாதை எங்கும் உன்னை
கால்கள் தொடர்ந்து பிண்ணும்.
காலம் கடக்கும் கணங்கள் - உன்பால்
காதல் வேண்டி நிற்கும்!

நீ நடந்து கொண்டேயிரு.
திரும்பிவிட்டால் - என்
கவிதைகளும் கற்பனை
முடங்கிவிடும்.
தொடர்ந்துவருவேன் - நான்






பூக்காரியின் பேரம் - கைச்
சுண்டலின் காரம்.
இருக்கையின் ஓரம்
நீ ஊட்டுகிறாய்

காலையின் வேகம்,
சாலையின் தாகம்,
காதலின் தேகம் பட்டு - உன்
காரம் இனிக்கிறது.

இளம் Romeoவின்
கல்லூரி Juliet - காதல் மறக்க
உன் விரல் ஸ்பரித்து என்
வெட்கம் பீறிடும்

உன் அருகமையின் எதிர்
என் சலனம் போரிடும்
பலன் அறியேன்!
விரல் கடித்து விளையாடும்
சிறுவன் நான்.

வெட்கம் என்னை தின்னும் நேரம் - உன்
பக்கம் நான் ஒளிந்து கொள்வேன்
மிச்சம் ஒன்று இல்லை - என்
இச்சை எங்கு செல்லும்?சொல்லடி.

முத்தம் ஒன்று கொடுத்துவிட்டேன் - உன்
சத்தம் எல்லாம் அடங்கிவிடும்.
நித்தம் உனக்கு வேண்டுமெனில் - மீண்டும்
உன் விரல் கடித்து விளையாடுவேன்.

உயிரின் சுவாசம் !






உயிரின் சுவாசம் அறியாது
உன் மேனி வாசம் புரியாது - என்
உணர்வுகள் இங்கு இறந்துவிடும்
காதல் அங்கு பிறந்துவிடும்
காதல் இங்கு தொடங்கிவிடும்

மனம் என்றும்
தொடர் சடுகுடு விளையாடும்
மோதல் இங்கே முடிந்துவிடும் - உயிரின்
மோட்சம் இங்கே தொடங்கிவிடும்.

தூக்கம் ஏனோ தொலைந்துவிடும்
துயரம் மட்டும் தொடர்ந்துவிடும்.

ஆற்றல் இங்கே சிதைந்துவிடும்
ஆண்மை இங்கே அடங்கிவிடும்

உயிரும் ஒரு நாள் ஓய்ந்துவிடும்
திருநாள் வந்த
ஒரு தலைக் காதல் பிரிந்துவிடும்..,

முத்ததின் ஈரம்







இட்ட முத்ததின் ஈரம் உலர்வதற்குள்,
தொட்ட விரலின் ஸ்பரிசம் உணர்வதற்குள்,
பேசும் விழியின் அர்த்தம் புரிவதற்குள்,
படரும் தேகம் தேடல் தெரிவதற்குள்,
பற்றும் கரங்கள் நேசம் கட்டுவதற்குள்
கலைந்து போகிறது,இந்த
பாழாய் போன கனவு.

கல்லூரி காதலியே.,






வெற்றுத்தாளாய் நானிருந்தேன்
எண்ணங்கள் போலவே
வண்ணங்களோடு விளையாடினாய்.
துரிகைகளை இன்று தொலைத்துவிட்டேன்.

எந்த வண்ணம்
எந்த துரிகையோடது?
வண்ணங்களும் தொய்ந்துகொண்டிருக்கின்றன.,

உனக்கு தெரியும் .
உன் மடி மீது சாயாத நாட்கள்
என் தூக்கத்தை இழந்திருப்பேன்.
என் தூக்கம் இனி எங்கு செல்லும்?

பெண்கள் பல நீ அறிமுகம் செய்தாய்.
கண்களின் கனவாய் கலைந்துவிட்டனர்.

உன்னோடு நிரம்ப கிறுக்கியிருக்கேன்.
உணர்கிறேன் இன்று உனக்குமட்டுமில்லையென்று.,!
ஆறுதல் தேடி நான்
அலைந்துகொண்டிருக்கிறேன்.

மதிய வெயிலில்
இளைப்பாறிய காட்டு முட்புதர்.,
பஞ்சு மெத்தையும்
இனி பாரமாய் என் எதிர்.,

அடிக்கடி எழுதுய Apology.,
அறியவில்லை யாரும் என் psychology
நீ ஒருத்தி மட்டுந்தான்.,

கொண்டாட்டங்களை பகிர்ந்து
கொண்ட Canteen Slice.,
சோகங்களை சொல்லி
யழுத அரசன் Wines.,

"இவன்கிட்ட பார்த்து இருங்க"
புதிய HOD'யை அறிமுகபடுத்திய
பழைய வ[ா]த்தியார்.,

பரிட்சைக்கு பணமின்றி
பார்வை திருப்பிய போது
பறிதவித்து கட்டிய பசுங்கயல்.,
பாடம் ஆனது பொயில்.,

பிட்டுத் தாளை
கட்டாய் கொடுத்த முதல்வர் - அதையும்
விட்டு விலகிய வெறுமை
Arrear'ய் இன்னமும் DBMS..,

வளைவு களை வரையச் சொல்லியதில்
பெண்களின் சுழிவுகளை வரைந்த
Drawing Hall.,

பெண்கள் விடுதிக்குள் நான்
அடித்த Laser Torch.,
என்னிடமே அதுயாரென்று
கேட்ட கலைArch.,

மயங்கிக் கொண்டாடிய
ஆண்டு விழா இரவு.,
பாடிக் களாய்த்த
மேடைப் பாட்டு..,

அரண்டு போகச் செய்த
அறை நண்பன் மரணம்.,
அதற்கும் ஆறுதல்
தந்த உன் சரணம்.,

தோல்வியை எதிர்பார்த்து அழுகையில்
தோழி சொன்ன ஆறுதல்.,
தோழியின் தோல்விக்கு நான்
சொன்ன ஆறுதல்.,
என் வெற்றியின் சில தோல்விகள்.,

அப்பா வந்த நாளில்
தப்பாமல் தந்த Beer.,
தோழிக்கு.,

மழைத்த பொழுதெல்லாம்
அழைத்து குளித்த
மொட்டை மாடிக் குளியல்.,

தூங்கும் முன் நேரம்
பார்த்து உச் கொட்டிய
காலை 6 மணி.,

மதுரை வந்தும்
மல்லி மறந்தவனை
தோழியடித்த மலர்க்கோபம்.,

திருடன் வந்த சாக்கில்
எட்டிப் பார்த்த பெண்கள் விடுதி.,
கருடனாய் நான்
வேண்டி அதன் கண்கள்.,

காதலின் Token'ஐ
கடித்த Coffee-Day.,
அதையும் கடனுக்கு
கொடுத்த Hi-Way.,

இடிந்த விடுதியில்
நண்பன் கொண்ட காதல்.,
நானிருந்த காவல்.,
எங்களுக்கு விழுந்த நோதல்.,

கை தொடுகையில் அவள்
கோபம்., பின்னொரு நாள்
என் காதில் நுழைந்த சேலைநூல்.,
கண்ணில் தழுவிய சோலை புல்.,

எழுதிய என் காதல் கடிதங்கள்
எனக்காய் திருத்திய HOD.,
கொண்ட தோர்கதிருற்காய்.,
வேண்டிய பிராத்தனை..,

இன்னும் எத்தனை.எத்தனை.,
என் கல்லுரியே., - நீ
என் காதலியே..,

வீசும் வாசம்,தேவதையின் கூந்தல்





தொலைந்து போன தேவதையின்
கலைந்து சென்ற கூந்தலின்
மறந்து போன மலரின்
வாசம் மட்டும் வீசும்
வருடம் பல கடந்தும்.,






உண்மை தான்!
ஒரு நல்ல கவிதை,
உன் போலவே
அரிதாகி விட்டது.,

வாசிப்பதும்
யோசிப்பதும்
யாசிப்பதும் - ஏன்
முயற்சிப்பதும் தான்.,

முற்றுப்புள்ளி யின்றி
தொடரவே யாசை
முடிந்துவிட்ட அந்த
கடைசி வரியில்.,

குறுகிய அத்தருணத்தில்
நிறைகள்,குறைகள்
நீடித்திருக்கலாம்-ஆயினும்
குறுகச் சொல்லவில்லை.,

புசித்தால் பசிக்கும்
சுவையின் தாபமிது.
முடியும் பயமின்றி
தொடரும் என்பயணம்.,

.,
.,
.,

விடைபெறு முன்
விம்மிச் சிரிக்கும்
கடைசிக் காட்சிகள்
உனக்கும் போலவே.,

இனிமையான வெறுமைகள்!







வீசி வரும் தென்றல்
உன்னில் உதிர்த்துவிட்டு
செல்லும் சூடுமலர் - என்னில்
கோர்த்துக்கொள்ளமுடிவதில்லை.,

பரவசப்பட்டு நீ எங்கோ
ஓடுகையில் தெறித்து
சிதறிய கொழுசின்
மணி தேட முடிவதில்லை.,

எப்பொழுதாவது சிக்கிக் கொள்ளும்
நீளக் கூந்தலை நீ விடுவிக்கையில்
விடுதலையாகும் ஒற்றைமுடியை
என்னோடு ஒட்டிக்கொள்ளமுடிவதில்லை.,

பயணப் படுகையில் பள்ளிக்கு
கூட்ட நெரிசலின் இடையில்
படியில் நின்று,ஒரு பயணச்சீட்டு - உன்னில்
கேட்டுப்பெற முடிவதில்லை.,

மின்னல் சிந்தனைகளில் நீ
அறியாது செய்கையில்
தெரியாது உடைந்து விழும்
கண்ணாடி வளையலில் என்
முகம் இரசிக்க முடிவதில்லை.,

கடந்து சென்றபின் - நீ
நடந்து விட்டுச் சென்ற
பாத சுவட்டில் என் கால்கள்
சிக்கிக் கொள்ள முடிவதில்லை.,

பேசிக்கொண்டிருக்கையில் அனிச்சையாய்
கரத்தில் ஒட்டிய பொட்டை
என் சுவர் தேவதையின்
நெற்றியில் அழகு பார்க்கமுடிவதில்லை.,

மறதியோடு நீ
கொடுத்து விட்டுச் சென்ற
வெள்ளை நிற கைக்குட்டையில்
ஒளிந்திருக்கும் உன் வாசம்
நான் கொள்ள முடிவதில்லை.,

*******
*******
*******

இனிமையாய் தானிருக்கிறது
இந்த வெறுமைகளும்
உன்னில் என்பதால்
மட்டும்!

நீளக் கூந்தல் தேவையில்லை







உன்னோடு உரையாடிய
அந்த நடுச்சாமம்
எனக்கு விடியவேயில்லை

நீ உசுப்பிவிட்ட
அந்த ஞாயிறு
இன்னமும் சாயவில்லை;எனக்கு,

என் மேஜை
நாட்காட்டி மட்டும்
ஏனோ ,பொய்யுரைக்கிறது, தினமும்.,

நம்மோடு நடமாடிய
நக்ஷ்த்திரங்கள்
பகலிலும் இப்பொழுது
புலப்படுகிறது.,

நீ பரிமாறிய
மீன் வறுவலின் கைம்மணம்
என்றென்றும் கற்பனையில்.,

நீளக் கூந்தல் எனக்கு
தேவையில்லை - அது
நீயா யிருக்கும் பட்ஷத்தில்.,

நீ கிசுகிசுத்த
என் காதல்
இன்னமும் காதில்.,

நீ சுவாசித்த
தென்றல் பத்திராய்
என் நெஞ்சினுள்.,

உன்னையும்,என்னையும்
தழுவிய நிலவின் குளிர்
ஸ்பரிசம் விலகவேயில்லை;அப்படியே.,

மலர்கள் மலர்ந்தால்
மட்டும்.,
நீ யிருக்கையில் எனக்கு
நீருக்குள் தாகமோ?







இப்பொழுதெல்லாம் நான்
கவிதை எழுதுவதில்லை.,
அவற்றை இரசிப்பதற்கு
அருகில் நீ இல்லாததால்.,

நீ இடையில் சொருகிய
சீனத்து விசிறியாய் என்
மனஞ் சுருங்கி விட்டது.,
பயனில்லாது கிடக்கிறேன், பார்.,

வெட்டு முன் னறியாத
நகத்தின் அருமையென உன்
முகம் பிரிந்து தவிக்கிறேன்.,

என் நகம் இப்பொழுது
வளர்ந்து விட்டது
நீ மட்டும் அப்படியே.,

செய்து விளையாடிய கப்பல்
கவிழ்ந்து கிடக்கிறது.,
எழுதி இரசித்த கவிதை
கசங்கி யுள்ளது.,

என்னவோ புலப்படவே யில்லை.,
உன்னை பார்க்கையில் மட்டும்
கன்னத்தில் அறையப்படும்
வஞ்சப் புன்னகை.,

உன்னை நேசிப்பதனால் சொல்கிறேன்,
நீ திருப்பிதராத என் புன்னகை
ஒவ்வொன்றும் பரண் மேல்
பாரமாய் யெனை அழுத்துகின்றன.,

என்னவோ., - இன்னும்
என்னென்னவோ.,

எஞ்சிய கவிதையாய்
தொலைந்துகொண்டிருக்கிறது.,
மிஞ்சிய நம் உறவு.,

சாலையோரம்.,







வெட்டப்பட்ட மரத்தின்
கொல்லப்பட்ட குஞ்சுகளுக்கான
கொத்தப்பட்ட இரைகளுடன்
கத்திக் கீறிச்சிடும் தாயின்
கடைசி செய்தி என்னவோ ?







இப்பொழுதெல்லாம் நீ எப்பொழுதாவது தான்
ஞாபகத்திற்கு வருகிறாய்…
எப்பொழுதெல்லாம் வருகிறாயோ,
அப்போழுதெல்லாம் அறைகிறாய்.
வலிக்கின்றது…

வந்த கணம் தெரிகிறது ,
சென்ற கணம் புரிவதில்லை
ஏன்?

இந்த கனவுகள் என்று
தொலையும்?
இந்த கணங்கள் எப்படி
கலையும்?

உன்னிடம் நான்
எதையும் பெற்றுக் கொள்ளவில்லை…
பொத்திப்பார்க்க,
நீ
மட்டும் ஏன்?
என்னையும்,எழுத்தையும்,?
எழுதிப்பார்க்கவா…?

எழுது தோழீ.,
சில கவிதைகள் பழகு.,








வார்தைகளை நான்
கிறுக்கிய காலம் போய்
வார்தைகள் எனை
கிறுக்குகின்றன ,இன்று.,

காலச் சக்கரத்தில்சிக்கிக்கொண்டது
என் மரபு,புதுக்கவிதை
நீ புலனாய்.,

உன் போலவே எல்லையில்லை,
தோட்டத்து முல்லையினும்
காட்டுக் கொடிகள் காட்சியன்றோ…?

என் விரல்களை ஒடிக்கின்றன,
வரிகள்,வலியில்லை.
வரிகளை பிரியமட்டும்…

என் எழுத்துக்கள்,என் வரி
என் வரிகள்,என் கவிதை
என் கவிதை எனதில்லை
என்ன
செய்வேன்? அய்யகோ…

காத்திருக்கிறேன்,
ஒரு நாள் கவிதை
இப்படி கிறுக்கும்.,

எப்படி இருக்கிறாய்,நீ…?

இழக்காத பிரிவு







இரவு , நிலவு
தென்றல் , மன்றம்
தேநீர் , குவளை
விழிகள் , மவுனம்

இல்லாத நீ,நான்
இழக்காத பிரிவு..,

நீ
இருந்திருந்தால் பிரிந்துவிடுவாய்
எனும் பயம்

நீ
இல்லாவிடத்து
எனக்கில்லை தோழீ.,

மனச் சிதறல்







மதிய உணவு வேளையில் - உன்
மடியில் படர்ந்த
மஞ்சள் கைக்குட்டையில்

உதட்டு நீர்
வழிந்து தெரிக்கையில்
சிதறிவிடுகிறது
என் மனமும்..,

காதல் இசை








ஒரு மெல்லிய இசை
நம்மிடையே கசிந்து கொண்டே
இருக்கிறது..,

உன் மவுனம்
உன் ரசனையின்
சாட்சியாகிறது..,

வரிகள் இல்லாத இசை
உன் மவுனமாகின்றது.
நம் உறவின் புது மொழி,
கசிகின்ற இசை.,

விடைபெறு மட்டும்
இசை தனது முடிவை
தொடங்குகிறது..,

வியப்பித்திருக்கும் இந்த
மவுனம் நம் இருவரின்
உரையாடல்கள்.,

(எனக்கு தெரியும் - இது )
கணம் எங்கோ
அந்த கீதம்
இசைந்துகொண்டிருக்குமென.,

காக்கையின் சாஸ்திரம்






ஐயரின் வீட்டு வேம்பில்
குஞ்சுக்கு மீனின் கண்னை
கொத்திக்கொடுக்கும்
காக்கையரியாது சாஸ்திரம்


உன் கண்களின் ரகசியம்








ஆற்றில் நீ
குளித்துக் கொண்டிருந்தாய்.,

மீன்கள் இரண்டு
உன்னிடத்தில் ஒட்டிக்கொண்டன..,

இன்னமும் அவை
துள்ளிக்கொண்டு..,

பயந்து விடாதே..,
உன் கண்களின் ரகசியம்.,
நான் யாரிடமும்
சொல்லமாட்டேன்

மஞ்சள் நீர்






• அவன் என்
அத்தை மகன் - ஆயினும்
அழைப்பதற்க்கில்லை
ஆசையுடன் ஓர் வார்த்தை..,

• பள்ளி காலங்களில்
கண்மாய் கண்டோம்.,
கைகள் மாறினோம்.,
காதல் கொண்டோமா ? - இல்

• வருவான் ,தருவான்,
பெறுவான் , மறைவான்.,
வைகறை காமம்., இது
விடியும் வரை தான்.,

• வருடம் முறை வரும்,
திருநாள் தினம் வருமோ ?
பருவம் உயிர் வரும்.,
பாவம் இவள் கை
மஞ்சள் நீர் .,

வேசியின் குங்குமம்





கூடல் முடிந்து வருகையில்
நெருடலாய்..,


வேசியின் சிதைந்த
நெற்றிக்குங்குமம் !

முதிர் கன்னி


என்ன தான் தாவணியிட்டு
மூடி மறைத்தாலும்
முடிவதில்லை…

அதுவே காட்டிக் கொடுத்துக்
கொக்களித்து சிரிக்கும்
கூடிக் கொண்டிருக்கும்

இவள் வயதை….

புதுப்பெண்







புதுப்பெண்

புருஷனை கைகோர்த்த புதுப்பெண்
திரும்பும் மட்டும் வேண்டிக்கிறேன் - அது,
நீயாய் இருக்கக்கூடாதென..,