எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label கசங்கி. Show all posts
Showing posts with label கசங்கி. Show all posts







இப்பொழுதெல்லாம் நான்
கவிதை எழுதுவதில்லை.,
அவற்றை இரசிப்பதற்கு
அருகில் நீ இல்லாததால்.,

நீ இடையில் சொருகிய
சீனத்து விசிறியாய் என்
மனஞ் சுருங்கி விட்டது.,
பயனில்லாது கிடக்கிறேன், பார்.,

வெட்டு முன் னறியாத
நகத்தின் அருமையென உன்
முகம் பிரிந்து தவிக்கிறேன்.,

என் நகம் இப்பொழுது
வளர்ந்து விட்டது
நீ மட்டும் அப்படியே.,

செய்து விளையாடிய கப்பல்
கவிழ்ந்து கிடக்கிறது.,
எழுதி இரசித்த கவிதை
கசங்கி யுள்ளது.,

என்னவோ புலப்படவே யில்லை.,
உன்னை பார்க்கையில் மட்டும்
கன்னத்தில் அறையப்படும்
வஞ்சப் புன்னகை.,

உன்னை நேசிப்பதனால் சொல்கிறேன்,
நீ திருப்பிதராத என் புன்னகை
ஒவ்வொன்றும் பரண் மேல்
பாரமாய் யெனை அழுத்துகின்றன.,

என்னவோ., - இன்னும்
என்னென்னவோ.,

எஞ்சிய கவிதையாய்
தொலைந்துகொண்டிருக்கிறது.,
மிஞ்சிய நம் உறவு.,