Posted by
கேசவன் முத்துவேல்
|
- ஆறாம் விரல்
இருந்திருந்தால் நன்றாயிருக்கும் - நேற்று நான்
வாங்கிய முத்தத்தில் ஒன்று கூடியிருக்கும் மு.கேசவன் 2008-08-11 |
Posted by
கேசவன் முத்துவேல்
|
- எனக்குள் இருந்த
வீணை நேற்று மீட்டெடுக்கப்பட்டது. - உன் மடியமர்ந்த
புது வீணை நான். காதல் ராகம் - நீ வாசிக்கிறாய். - உன் விரல் மீட்டிய காதல் ராகம்
உன் உதடு பதித்த ஈரத்தை உலர்த்திவிட்டு செல்கிறது . எங்கோ.,? |
Posted by
கேசவன் முத்துவேல்
|
- என் முன் ஒரு தேவதை
அழுவதற்கு ஆயத்தமாகிறாள் அழகை இரசிப்பதற்கு நானும். - இளம்தேவதைகள் என்றும் அழகு.
இவள் இன்னமும். சிரிப்பதற்கு சொல்லாத காரணம் அழுவதற்கு என்ன தேடுவாள்? - சுயநலம் கொண்ட என்
கைக்குட்டை அவள் கண்ணீருக்கென காத்திருக்கும். - வழிந்தோடும் கண்ணீரில்
அவள் பெண்மை கொஞ்சி மிளிரும். - சிரிக்கும் என் உதடு கண்டு
பெண் சிணுங்கல் விம்மிப் பெருகும்., - சிந்தும் கண்ணீரை - என்
கைக்குட்டை சிறைகொண்டு உள்ளங்கையில் துள்ளும்! மு.கேசவன் 2008-09-25 |
Posted by
கேசவன் முத்துவேல்
|
மதிய உணவு வேளையில் - உன் மடியில் படர்ந்த மஞ்சள் கைக்குட்டையில் உதட்டு நீர் வழிந்து தெரிக்கையில் சிதறிவிடுகிறது என் மனமும்.., |