Posted by
கேசவன் முத்துவேல்
|
- குச்சு கட்டியவன் ஒருவன் கண்
வச்சு காத்தவன் மருவன் - கை பிடிச்சு வந்தவன் இவனே வெண் பிச்சி கொண்டு வருவானோ? - வெட்கம் வந்த நேரம் - என்
பக்கம் கூற மறந்தாள் - புது சொர்க்கம் கண்ட பின்னும் இவள் தர்க்கம் இனி எங்கு வெல்லும்? - குத்தும் என மழித்தான்
குத்தம் என மறுத்தாள்., பத்தும் மிவள் மறக்கவேண்டும்., சுற்றம் என்று சூழுமோ? - புன்னை யாக்கி விட்டாள் என்னை
தன்னை மறக்கும் தமக்கை. பின்னும் ஊறும் தமிழ்., ஆதவன் கன்னி கூட ஆகும் எட்டு திங்கள்., [தமக்கைக்கு.,] மு.கேசவன் 2008-12-31 |
Posted by
கேசவன் முத்துவேல்
|
உண்மை தான்! ஒரு நல்ல கவிதை, உன் போலவே அரிதாகி விட்டது.,
வாசிப்பதும் யோசிப்பதும் யாசிப்பதும் - ஏன் முயற்சிப்பதும் தான்.,
முற்றுப்புள்ளி யின்றி தொடரவே யாசை முடிந்துவிட்ட அந்த கடைசி வரியில்.,
குறுகிய அத்தருணத்தில் நிறைகள்,குறைகள் நீடித்திருக்கலாம்-ஆயினும் குறுகச் சொல்லவில்லை.,
புசித்தால் பசிக்கும் சுவையின் தாபமிது. முடியும் பயமின்றி தொடரும் என்பயணம்.,
., ., .,
விடைபெறு முன் விம்மிச் சிரிக்கும் கடைசிக் காட்சிகள் உனக்கும் போலவே., |