Posted by
கேசவன் முத்துவேல்
|
- அன்னமிடச் செய்தாள் - என்னை
அண்ணனாக்கிக் கொண்ட வள் பின்னும் என்னடி ஊடல்- உன் மன்னவன் தேடி வந்த வேளையில்? - கைப்பிடித்து வந்தவன் - உள்ளங்
கால் பிடித்தும் விடுவாள் தோள் சாயும் சமயம் - நான் தாழ் சேர்ந்து போவேனோ? - அன்னை உண்டு அருகில்
அண்ண னழைப்பான் தொலைவில் நங்கைக் குண்டோர் நல்லூர் மங்கை மடிசாயும் கரைக்காற்று. - தாலிக்கு துடிக்கும் கழுத்து,
தோழிக்கு துப்பட்டா எதுக்கு? நாழிக்கு உண்டோ பொறுமை? தாழிக்குள் திமிறும் காதல். - திருநாள் வருடமும் உனக்கு.
இருநா ளென அதை செய்குவோம். வரும்நா ளெல்லாம் வசந்தமே, வருவான் நீயும் விழித்திரு |
Posted by
கேசவன் முத்துவேல்
|
- குச்சு கட்டியவன் ஒருவன் கண்
வச்சு காத்தவன் மருவன் - கை பிடிச்சு வந்தவன் இவனே வெண் பிச்சி கொண்டு வருவானோ? - வெட்கம் வந்த நேரம் - என்
பக்கம் கூற மறந்தாள் - புது சொர்க்கம் கண்ட பின்னும் இவள் தர்க்கம் இனி எங்கு வெல்லும்? - குத்தும் என மழித்தான்
குத்தம் என மறுத்தாள்., பத்தும் மிவள் மறக்கவேண்டும்., சுற்றம் என்று சூழுமோ? - புன்னை யாக்கி விட்டாள் என்னை
தன்னை மறக்கும் தமக்கை. பின்னும் ஊறும் தமிழ்., ஆதவன் கன்னி கூட ஆகும் எட்டு திங்கள்., [தமக்கைக்கு.,] மு.கேசவன் 2008-12-31 |
Posted by
கேசவன் முத்துவேல்
|
கொங்கையை கொண்டாடுபவன் நானோ? கங்கையென ஊறும் காமமிது நங்கை நின் பால் - நான் திங்கள் சூடும் மல்லி தற்று. |
Posted by
கேசவன் முத்துவேல்
|
- இவள் என் தேவதை.
எனினும், துளித்துவிட்ட மேகம். - விரும்பிய நிலம்
சேரும் நீர் அல்லாள். - சேரும் நிலம்
நிறம் மாறும் விதி இவள்தற்று. - வெட்கம் கொண்ட
பெட்டையென, கண்ணீர் சிந்தும் மழையில் நான் நனைகிறேன் |