Posted by
கேசவன் முத்துவேல்
|
- ஒரு மல்லி சூடவில்லை
ஒரு மல்லி கசங்கவில்லை ஒரு புடவை கூடவில்லை ஒரு புடவை களையவில்லை - அன்னம் பால் ஊட்டவில்லை
கிண்ணம் தேன் சுவைக்கவில்லை எண்ணம் எங்கும் காதல் தின்னத் தோனும் காமம். - விருந்தினர் வாராத நமதில்லத்தில்
வெறுந்தரையில் நாம் காதலிப்போம். எனை நீராட்ட முயற்சித்து உனை குளிப்பாட்டிக் கொள்வாய். - ஒருதட்டில் பசியாருவோம்
நான் புசித்திருக்க நீ கையலம்புவாய் நீ புசித்தவுடன் நான் விரல் கட்டே போட்டுக்கொள்வேன்.வலியில்லை. - ஒரு போர்வைக்குள் இருதூக்கம் எப்படி?
சிறு குழந்தையென வினவுகிறாய். ஒருபோர்வைக்குள் எதுக்கடி தூக்கம்? பெருங் குறும்புகள் புரிவோம் வா., - வடிந்தவுடன் முடிந்துவிடும் காமமன்று
விடிந்த பின்னும் ஓடும் காதல்நதி நமது ஒடிந்தாலும் மணம்வீசும் முல்லை நீ. கருகியும் காதல் விதை பரப்புகிறாய். - "என்னென்ன பிடிக்கும் உனக்கு?"
என்னவன் உன்னை மட்டுந்தான் எனக்கு. பின்னெங்கடி போனாய் தவிக்கவிட்டு. விண்ணோடும், மண்ணோடும் என் செய்வேன்? - என்னோடு வருவேன் என்றாய்.
எமனோடு எங்கு போகிறாய்? நரகத்தில் நான் துவழ, சொர்க்கத்தில் என்னடி செய்கிறாய்? - நான் காத்திருக்க வருவாய் குவளைபாலோடு.
ஏன்?சொர்க்கத்தில் நடக்கும் இரவுக்கு முந்திக்கொண்டு நீயும் காத்திருக்கிறாய். பிந்தியும் வருவேன் நான்,அந்தி சாயும். - பன்னீரில் தான் உனை நீராட்டுவேன்-சொட்டும்
நன்னீர் கருங்கூந்தலில் முகம் புதைவேன். வெந்நீர் மலர்மேனிக்கு வேதனையோ? கண்ணீருக்கென கண்களும் வரண்டதடி. - பாவை யெல்லாம் இனித்தது-தேன்
பாகு கூட கசக்குது போடி நீயும் முன்னால்-வருவேன் பேடி நானும் பின்னால். |
Posted by
கேசவன் முத்துவேல்
Posted by
கேசவன் முத்துவேல்
|
- ஆறாம் விரல்
இருந்திருந்தால் நன்றாயிருக்கும் - நேற்று நான்
வாங்கிய முத்தத்தில் ஒன்று கூடியிருக்கும் மு.கேசவன் 2008-08-11 |
Posted by
கேசவன் முத்துவேல்
|
- எனக்குள் இருந்த
வீணை நேற்று மீட்டெடுக்கப்பட்டது. - உன் மடியமர்ந்த
புது வீணை நான். காதல் ராகம் - நீ வாசிக்கிறாய். - உன் விரல் மீட்டிய காதல் ராகம்
உன் உதடு பதித்த ஈரத்தை உலர்த்திவிட்டு செல்கிறது . எங்கோ.,? |
Posted by
கேசவன் முத்துவேல்
|
இட்ட முத்ததின் ஈரம் உலர்வதற்குள், தொட்ட விரலின் ஸ்பரிசம் உணர்வதற்குள், பேசும் விழியின் அர்த்தம் புரிவதற்குள், படரும் தேகம் தேடல் தெரிவதற்குள், பற்றும் கரங்கள் நேசம் கட்டுவதற்குள் கலைந்து போகிறது,இந்த பாழாய் போன கனவு. |
Posted by
கேசவன் முத்துவேல்
|
தொலைந்து போன தேவதையின் கலைந்து சென்ற கூந்தலின் மறந்து போன மலரின் வாசம் மட்டும் வீசும் வருடம் பல கடந்தும்., |
Posted by
கேசவன் முத்துவேல்
|
உண்மை தான்! ஒரு நல்ல கவிதை, உன் போலவே அரிதாகி விட்டது.,
வாசிப்பதும் யோசிப்பதும் யாசிப்பதும் - ஏன் முயற்சிப்பதும் தான்.,
முற்றுப்புள்ளி யின்றி தொடரவே யாசை முடிந்துவிட்ட அந்த கடைசி வரியில்.,
குறுகிய அத்தருணத்தில் நிறைகள்,குறைகள் நீடித்திருக்கலாம்-ஆயினும் குறுகச் சொல்லவில்லை.,
புசித்தால் பசிக்கும் சுவையின் தாபமிது. முடியும் பயமின்றி தொடரும் என்பயணம்.,
., ., .,
விடைபெறு முன் விம்மிச் சிரிக்கும் கடைசிக் காட்சிகள் உனக்கும் போலவே., |
Posted by
கேசவன் முத்துவேல்
|
இப்பொழுதெல்லாம் நீ எப்பொழுதாவது தான் ஞாபகத்திற்கு வருகிறாய்… எப்பொழுதெல்லாம் வருகிறாயோ, அப்போழுதெல்லாம் அறைகிறாய். வலிக்கின்றது…
வந்த கணம் தெரிகிறது , சென்ற கணம் புரிவதில்லை ஏன்?
இந்த கனவுகள் என்று தொலையும்? இந்த கணங்கள் எப்படி கலையும்?
உன்னிடம் நான் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை… பொத்திப்பார்க்க, நீ மட்டும் ஏன்? என்னையும்,எழுத்தையும்,? எழுதிப்பார்க்கவா…?
எழுது தோழீ., சில கவிதைகள் பழகு., |
Posted by
கேசவன் முத்துவேல்
|
வார்தைகளை நான் கிறுக்கிய காலம் போய் வார்தைகள் எனை கிறுக்குகின்றன ,இன்று.,
காலச் சக்கரத்தில்சிக்கிக்கொண்டது என் மரபு,புதுக்கவிதை நீ புலனாய்.,
உன் போலவே எல்லையில்லை, தோட்டத்து முல்லையினும் காட்டுக் கொடிகள் காட்சியன்றோ…?
என் விரல்களை ஒடிக்கின்றன, வரிகள்,வலியில்லை. வரிகளை பிரியமட்டும்…
என் எழுத்துக்கள்,என் வரி என் வரிகள்,என் கவிதை என் கவிதை எனதில்லை என்ன செய்வேன்? அய்யகோ…
காத்திருக்கிறேன், ஒரு நாள் கவிதை இப்படி கிறுக்கும்.,
எப்படி இருக்கிறாய்,நீ…? |
Posted by
கேசவன் முத்துவேல்
|
இரவு , நிலவு தென்றல் , மன்றம் தேநீர் , குவளை விழிகள் , மவுனம்
இல்லாத நீ,நான் இழக்காத பிரிவு..,
நீ இருந்திருந்தால் பிரிந்துவிடுவாய் எனும் பயம்
நீ இல்லாவிடத்து எனக்கில்லை தோழீ., |
Posted by
கேசவன் முத்துவேல்
|
மதிய உணவு வேளையில் - உன் மடியில் படர்ந்த மஞ்சள் கைக்குட்டையில் உதட்டு நீர் வழிந்து தெரிக்கையில் சிதறிவிடுகிறது என் மனமும்.., |
Posted by
கேசவன் முத்துவேல்
 |
ஒரு மெல்லிய இசை நம்மிடையே கசிந்து கொண்டே இருக்கிறது.., உன் மவுனம் உன் ரசனையின் சாட்சியாகிறது.., வரிகள் இல்லாத இசை உன் மவுனமாகின்றது. நம் உறவின் புது மொழி, கசிகின்ற இசை., விடைபெறு மட்டும் இசை தனது முடிவை தொடங்குகிறது.., வியப்பித்திருக்கும் இந்த மவுனம் நம் இருவரின் உரையாடல்கள்., (எனக்கு தெரியும் - இது ) கணம் எங்கோ அந்த கீதம் இசைந்துகொண்டிருக்குமென., |
Posted by
கேசவன் முத்துவேல்
 |
• அவன் என் அத்தை மகன் - ஆயினும் அழைப்பதற்க்கில்லை ஆசையுடன் ஓர் வார்த்தை..,
• பள்ளி காலங்களில் கண்மாய் கண்டோம்., கைகள் மாறினோம்., காதல் கொண்டோமா ? - இல்
• வருவான் ,தருவான், பெறுவான் , மறைவான்., வைகறை காமம்., இது விடியும் வரை தான்.,
• வருடம் முறை வரும், திருநாள் தினம் வருமோ ? பருவம் உயிர் வரும்., பாவம் இவள் கை மஞ்சள் நீர் ., |
Posted by
கேசவன் முத்துவேல்
 |
கூடல் முடிந்து வருகையில் நெருடலாய்.., வேசியின் சிதைந்த நெற்றிக்குங்குமம் ! |
Posted by
கேசவன் முத்துவேல்
புருஷனை கைகோர்த்த புதுப்பெண் திரும்பும் மட்டும் வேண்டிக்கிறேன் அது, நீயாய் இருக்கக்கூடாதென..,
|
 |
| மு.கேசவன் |