Posted by
கேசவன் முத்துவேல்
|
- அன்னமிடச் செய்தாள் - என்னை
அண்ணனாக்கிக் கொண்ட வள் பின்னும் என்னடி ஊடல்- உன் மன்னவன் தேடி வந்த வேளையில்? - கைப்பிடித்து வந்தவன் - உள்ளங்
கால் பிடித்தும் விடுவாள் தோள் சாயும் சமயம் - நான் தாழ் சேர்ந்து போவேனோ? - அன்னை உண்டு அருகில்
அண்ண னழைப்பான் தொலைவில் நங்கைக் குண்டோர் நல்லூர் மங்கை மடிசாயும் கரைக்காற்று. - தாலிக்கு துடிக்கும் கழுத்து,
தோழிக்கு துப்பட்டா எதுக்கு? நாழிக்கு உண்டோ பொறுமை? தாழிக்குள் திமிறும் காதல். - திருநாள் வருடமும் உனக்கு.
இருநா ளென அதை செய்குவோம். வரும்நா ளெல்லாம் வசந்தமே, வருவான் நீயும் விழித்திரு |
Posted by
கேசவன் முத்துவேல்
|
- நீ இரசிக்கும் மட்டும்
என் எழுத்துக்கள். - பிழைகள் முழுதும்
எனதாகிறது. திருத்தம் மட்டும் உனது. - என் கற்பனை கங்கையின்
துளிகள் முழுதும் - உள் நீந்தும் மீன் - நீ எப்படி பருககூடும்? - நதியின் பல துளிகள்
துளியின் ஒரு சிதறல். சிதறல் ஊடுருவும் வானவில் நீ. - துளிகள் சிதறினும்
வண்ணங்கள் குன்றா கவிதை நீ. - என் ஞாபகமாக
நீ பறித்துக்கொண்ட எழுத்துக்களை பகிர்ந்துகொடு - அவை எனக்கும்
பங்குண்டு. |