எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label romance. Show all posts
Showing posts with label romance. Show all posts

அனலென காமம்




•அனலென காமம்
கனலென காதல்
மணல் திரித்த மஞ்சள்
கழுத்தில் முடிந்த கதையுது.

•கங்கையெனன காதல் இது.
எங்கு பொங்குது?எத்துணை பொங்குது?
பாவமெது?மோட்சமெது?
மங்கை மிதக்கும் பாற்கடலோ?

•உள்ளங்கால் பிடித்த போது,
உச்சி முகர்ந்த போது,
உதடு முத்தமிட்ட போது,
உணரவில்லை., பொய்யென இவை.

•ஒலிக்கவேண்டிய மேளம் - எனக்கு
ஒப்பாரியாய் ஏன் அழுகிறது?
விழித்திருக்க வேண்டிய இரவு - ஏன்
சுருண்டு இருண்டிருக்கிறது?

•நீயும்,நானும் சமைப்போம்.
ரசமெல்லாம் இனிக்கும்.
பிசைந்து ஊட்டும் போது
புளிப்பு ஏது? புலன் ஏது?

•எனக்கான மஞ்சள் நீர்த்தோ?
உனக்கென நீராடிவிட்டாய்.
வெற்றிடம் வெல்லும் காற்றென
வியாப்பித்துவிட்டாய் மனமெங்கும்.


மு.கேசவன்
2009-04-01



சரி, நாம் கிளம்புவோம்






மலர்ந்த வெண்முல்லையோ ? பாறையை
பிளந்த கார் பனித்துளியோ? அச்சு
கரிந்த கயல் விழியோ ? - ஆங்கு
பணிந்த யான் , சிறு பரியோ?

சிவந்த இதழ் உனதோ ? - அதை
சிவக்க செய்தது எனத ன்றோ?
பரந்த மார் எனதோ ?- அதில்
படர்ந்த கொடி நீ யன்றோ?

புடவை எது எனக்கு அழகென்கிறாய்
புடவை எல்லாம் அழகை மறைக்குமென
உண்மையை நான் உளறினால்
உனக்கேன் வரும் பொய்க்கோபம்?

கட்டுபுத்தகம் மொத்தம் - என் மேல்
கொட்டி கொண்டு சிரிக்கிறாய் -பாவம்
தட்டு தடுமாறி வீழ்வேன் - உன்மேல்
விட்டு விலகி விளையாடாதே.,

நீ பேச ஆரம்பித்த முதற்சொல்- "சரி,
நாம் கிளம்புவோம்" அழகான பொய்யது.
நாழி கழிந்தது, நாளும் கழிந்தது,
நாம் மாறவில்லை. மீண்டும் பொய்க்கிறாய்
"சரி, நாம் கிளம்புவோம்"


மு.கேசவன்
2009-01-[16…23]

திங்கள் சூடும் மல்லி






கொங்கையை கொண்டாடுபவன் நானோ?
கங்கையென ஊறும் காமமிது
நங்கை நின் பால் - நான்
திங்கள் சூடும் மல்லி தற்று.

முத்ததின் ஈரம்







இட்ட முத்ததின் ஈரம் உலர்வதற்குள்,
தொட்ட விரலின் ஸ்பரிசம் உணர்வதற்குள்,
பேசும் விழியின் அர்த்தம் புரிவதற்குள்,
படரும் தேகம் தேடல் தெரிவதற்குள்,
பற்றும் கரங்கள் நேசம் கட்டுவதற்குள்
கலைந்து போகிறது,இந்த
பாழாய் போன கனவு.








வார்தைகளை நான்
கிறுக்கிய காலம் போய்
வார்தைகள் எனை
கிறுக்குகின்றன ,இன்று.,

காலச் சக்கரத்தில்சிக்கிக்கொண்டது
என் மரபு,புதுக்கவிதை
நீ புலனாய்.,

உன் போலவே எல்லையில்லை,
தோட்டத்து முல்லையினும்
காட்டுக் கொடிகள் காட்சியன்றோ…?

என் விரல்களை ஒடிக்கின்றன,
வரிகள்,வலியில்லை.
வரிகளை பிரியமட்டும்…

என் எழுத்துக்கள்,என் வரி
என் வரிகள்,என் கவிதை
என் கவிதை எனதில்லை
என்ன
செய்வேன்? அய்யகோ…

காத்திருக்கிறேன்,
ஒரு நாள் கவிதை
இப்படி கிறுக்கும்.,

எப்படி இருக்கிறாய்,நீ…?