எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

கங்கையின் துளிகள்





  • நீ இரசிக்கும் மட்டும்
    என் எழுத்துக்கள்.
  • பிழைகள் முழுதும்
    எனதாகிறது.
    திருத்தம் மட்டும் உனது.
  • என் கற்பனை கங்கையின்
    துளிகள் முழுதும் - உள்
    நீந்தும் மீன் - நீ
    எப்படி பருககூடும்?
  • நதியின் பல துளிகள்
    துளியின் ஒரு சிதறல்.
    சிதறல் ஊடுருவும்
    வானவில் நீ.
  • துளிகள் சிதறினும்
    வண்ணங்கள் குன்றா
    கவிதை நீ.
  • என் ஞாபகமாக
    நீ பறித்துக்கொண்ட
    எழுத்துக்களை
    பகிர்ந்துகொடு
  • அவை எனக்கும்
    பங்குண்டு.

முத்ததின் ஈரம்







இட்ட முத்ததின் ஈரம் உலர்வதற்குள்,
தொட்ட விரலின் ஸ்பரிசம் உணர்வதற்குள்,
பேசும் விழியின் அர்த்தம் புரிவதற்குள்,
படரும் தேகம் தேடல் தெரிவதற்குள்,
பற்றும் கரங்கள் நேசம் கட்டுவதற்குள்
கலைந்து போகிறது,இந்த
பாழாய் போன கனவு.

வீசும் வாசம்,தேவதையின் கூந்தல்





தொலைந்து போன தேவதையின்
கலைந்து சென்ற கூந்தலின்
மறந்து போன மலரின்
வாசம் மட்டும் வீசும்
வருடம் பல கடந்தும்.,







இப்பொழுதெல்லாம் நான்
கவிதை எழுதுவதில்லை.,
அவற்றை இரசிப்பதற்கு
அருகில் நீ இல்லாததால்.,

நீ இடையில் சொருகிய
சீனத்து விசிறியாய் என்
மனஞ் சுருங்கி விட்டது.,
பயனில்லாது கிடக்கிறேன், பார்.,

வெட்டு முன் னறியாத
நகத்தின் அருமையென உன்
முகம் பிரிந்து தவிக்கிறேன்.,

என் நகம் இப்பொழுது
வளர்ந்து விட்டது
நீ மட்டும் அப்படியே.,

செய்து விளையாடிய கப்பல்
கவிழ்ந்து கிடக்கிறது.,
எழுதி இரசித்த கவிதை
கசங்கி யுள்ளது.,

என்னவோ புலப்படவே யில்லை.,
உன்னை பார்க்கையில் மட்டும்
கன்னத்தில் அறையப்படும்
வஞ்சப் புன்னகை.,

உன்னை நேசிப்பதனால் சொல்கிறேன்,
நீ திருப்பிதராத என் புன்னகை
ஒவ்வொன்றும் பரண் மேல்
பாரமாய் யெனை அழுத்துகின்றன.,

என்னவோ., - இன்னும்
என்னென்னவோ.,

எஞ்சிய கவிதையாய்
தொலைந்துகொண்டிருக்கிறது.,
மிஞ்சிய நம் உறவு.,







இப்பொழுதெல்லாம் நீ எப்பொழுதாவது தான்
ஞாபகத்திற்கு வருகிறாய்…
எப்பொழுதெல்லாம் வருகிறாயோ,
அப்போழுதெல்லாம் அறைகிறாய்.
வலிக்கின்றது…

வந்த கணம் தெரிகிறது ,
சென்ற கணம் புரிவதில்லை
ஏன்?

இந்த கனவுகள் என்று
தொலையும்?
இந்த கணங்கள் எப்படி
கலையும்?

உன்னிடம் நான்
எதையும் பெற்றுக் கொள்ளவில்லை…
பொத்திப்பார்க்க,
நீ
மட்டும் ஏன்?
என்னையும்,எழுத்தையும்,?
எழுதிப்பார்க்கவா…?

எழுது தோழீ.,
சில கவிதைகள் பழகு.,








வார்தைகளை நான்
கிறுக்கிய காலம் போய்
வார்தைகள் எனை
கிறுக்குகின்றன ,இன்று.,

காலச் சக்கரத்தில்சிக்கிக்கொண்டது
என் மரபு,புதுக்கவிதை
நீ புலனாய்.,

உன் போலவே எல்லையில்லை,
தோட்டத்து முல்லையினும்
காட்டுக் கொடிகள் காட்சியன்றோ…?

என் விரல்களை ஒடிக்கின்றன,
வரிகள்,வலியில்லை.
வரிகளை பிரியமட்டும்…

என் எழுத்துக்கள்,என் வரி
என் வரிகள்,என் கவிதை
என் கவிதை எனதில்லை
என்ன
செய்வேன்? அய்யகோ…

காத்திருக்கிறேன்,
ஒரு நாள் கவிதை
இப்படி கிறுக்கும்.,

எப்படி இருக்கிறாய்,நீ…?

இழக்காத பிரிவு







இரவு , நிலவு
தென்றல் , மன்றம்
தேநீர் , குவளை
விழிகள் , மவுனம்

இல்லாத நீ,நான்
இழக்காத பிரிவு..,

நீ
இருந்திருந்தால் பிரிந்துவிடுவாய்
எனும் பயம்

நீ
இல்லாவிடத்து
எனக்கில்லை தோழீ.,

மனச் சிதறல்







மதிய உணவு வேளையில் - உன்
மடியில் படர்ந்த
மஞ்சள் கைக்குட்டையில்

உதட்டு நீர்
வழிந்து தெரிக்கையில்
சிதறிவிடுகிறது
என் மனமும்..,

காதல் இசை








ஒரு மெல்லிய இசை
நம்மிடையே கசிந்து கொண்டே
இருக்கிறது..,

உன் மவுனம்
உன் ரசனையின்
சாட்சியாகிறது..,

வரிகள் இல்லாத இசை
உன் மவுனமாகின்றது.
நம் உறவின் புது மொழி,
கசிகின்ற இசை.,

விடைபெறு மட்டும்
இசை தனது முடிவை
தொடங்குகிறது..,

வியப்பித்திருக்கும் இந்த
மவுனம் நம் இருவரின்
உரையாடல்கள்.,

(எனக்கு தெரியும் - இது )
கணம் எங்கோ
அந்த கீதம்
இசைந்துகொண்டிருக்குமென.,

காக்கையின் சாஸ்திரம்






ஐயரின் வீட்டு வேம்பில்
குஞ்சுக்கு மீனின் கண்னை
கொத்திக்கொடுக்கும்
காக்கையரியாது சாஸ்திரம்


உன் கண்களின் ரகசியம்








ஆற்றில் நீ
குளித்துக் கொண்டிருந்தாய்.,

மீன்கள் இரண்டு
உன்னிடத்தில் ஒட்டிக்கொண்டன..,

இன்னமும் அவை
துள்ளிக்கொண்டு..,

பயந்து விடாதே..,
உன் கண்களின் ரகசியம்.,
நான் யாரிடமும்
சொல்லமாட்டேன்

வேசியின் குங்குமம்





கூடல் முடிந்து வருகையில்
நெருடலாய்..,


வேசியின் சிதைந்த
நெற்றிக்குங்குமம் !

முதிர் கன்னி


என்ன தான் தாவணியிட்டு
மூடி மறைத்தாலும்
முடிவதில்லை…

அதுவே காட்டிக் கொடுத்துக்
கொக்களித்து சிரிக்கும்
கூடிக் கொண்டிருக்கும்

இவள் வயதை….

புதுப்பெண்







புதுப்பெண்

புருஷனை கைகோர்த்த புதுப்பெண்
திரும்பும் மட்டும் வேண்டிக்கிறேன் - அது,
நீயாய் இருக்கக்கூடாதென..,

பத்திரம்

ஒரு கண்ணாடி யணிந்துகொள்
யாரேனும் பறிக்கக் கூடும்
காலையில் மலர்ந்த மரைகளென,
மையிட்ட உன் கண்களை..,

மு.கேசவன்
11/07/2007

காதல் கடவுளிடம்..,




புருஷனை கைகோர்த்த புதுப்பெண்
திரும்பும் மட்டும் வேண்டிக்கிறேன்
அது, நீயாய்
இருக்கக்கூடாதென..,

மு.கேசவன்

உன்னிடம் நான் யாசிப்பது வேறொன்றுமில்லை,
ஒரு கோப்பை தேநீரும்,
நிலவின் கீழ் சில வார்த்தைகளும்..,

இரவின் நிலவு எனக்குச் சொந்தமில்லை,
கோப்பை தேநீர் உனக்கும்தான்

என் பிழை
உன் முதல் வார்த்தையில் - இந்த,
தேநீர் ஆறிவிட்டிருந்தது..,

Kesavan.M
2007