Posted by
கேசவன் முத்துவேல்
|
- நீர் சூழ்ந்த குமிழென
ஆசைகள் சூழ்ந்த காதலில் நான் மிதந்து வந்தேன். - உனக்கென கொண்டுவருகிறென்,
கணக்கென கூடாத கட்டிலடங்கா காமங்கள், பொத்திக்கொண்டு. - மட்டத்தின் மத்தியில்
பட்டென தெறித்துவிடும் இந்த குமிழ். - காற்றோடு கரையும் - என்
வாசங்கள், - நீ இல்லை சுவாசிப்பதற்கு. - திசைகள் தேடியலையும் - இந்த
களவுகள் என் கட்டி லில்லை. - குமிழ் மட்டும் காமம், - குங்குமச்
சிமிழ் மாறும் தருணம் - இந்த காதல் மூழ்கிவிடும். |
Posted by
கேசவன் முத்துவேல்
|
நதியோடு நாணல் கொண்ட உறவு உன்னோடு தோழி நான்., மழைத்துளியின் வெள்ளமென உன்னை இழுத்துக்கொண்டு நான், அப்படியே நிற்கிறாய் நீ., ஓடும் பாதையாவும் பல நாணல் சேர்த்துக்கொள்வேன் நிற்கும் நாணல் உன்மேல் மணல் வாரித்தூரிச்செல்வேன் நாணல் பல கண்டேன் உன் போல் ஒன்று இல்லை தோழி கானல் நீரும் நீதான் கண்டு கொண்டேன், வாழி. ஓடும் நதி நான். உன்னை தொலைத்துவிட்டேன் தோழி. தேடும் விழிகள் உனக்கு தெரிந்தும் கடந்தேன் நான். நதியென பிறந்துவிட்டேன்-நீ நாணலென நிற்பதற்கில்லை சதிகள் செய்யும் விதிகள் இது. கதி யறியேன் சேடி. கடல் கரைந்துவிட்டேன் என் கண்ணின் நீர் அறிவார் யார்? சொல்லடி! |
Posted by
கேசவன் முத்துவேல்
|
நீ தாவணியிட்டு வந்த நாளெல்லாம் என்னால் பூக்களை இரசிக்க முடியவில்லை. உன்மேல் கோபம் கொண்ட பூக்கள் என்னைத்தான் திட்டுகின்றன. மலரை எப்போது ஏமாற்றினாய்? ஏகபத்தினி விரதன் வேண்டி நீ இராமன் காண்கிறாய். சீதைக்குதானே தெரியும், இராமனின் சஞ்சலம். சீதைக்கும் எதிரி - நீ. நீ தூதுசென்ற காதல் எல்லாம் பாதி பிரிந்த கதை தெரியுமா? கானும் கண்கள் யாவும் - உன்னை கண்டு காதல் கொள்ளும் போதுமா? போகும் பாதை எங்கும் உன்னை கால்கள் தொடர்ந்து பிண்ணும். காலம் கடக்கும் கணங்கள் - உன்பால் காதல் வேண்டி நிற்கும்! நீ நடந்து கொண்டேயிரு. திரும்பிவிட்டால் - என் கவிதைகளும் கற்பனை முடங்கிவிடும். தொடர்ந்துவருவேன் - நான் |