எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label ஞாயிறு. Show all posts
Showing posts with label ஞாயிறு. Show all posts

உயிரின் சுவாசம் !






உயிரின் சுவாசம் அறியாது
உன் மேனி வாசம் புரியாது - என்
உணர்வுகள் இங்கு இறந்துவிடும்
காதல் அங்கு பிறந்துவிடும்
காதல் இங்கு தொடங்கிவிடும்

மனம் என்றும்
தொடர் சடுகுடு விளையாடும்
மோதல் இங்கே முடிந்துவிடும் - உயிரின்
மோட்சம் இங்கே தொடங்கிவிடும்.

தூக்கம் ஏனோ தொலைந்துவிடும்
துயரம் மட்டும் தொடர்ந்துவிடும்.

ஆற்றல் இங்கே சிதைந்துவிடும்
ஆண்மை இங்கே அடங்கிவிடும்

உயிரும் ஒரு நாள் ஓய்ந்துவிடும்
திருநாள் வந்த
ஒரு தலைக் காதல் பிரிந்துவிடும்..,

நீளக் கூந்தல் தேவையில்லை







உன்னோடு உரையாடிய
அந்த நடுச்சாமம்
எனக்கு விடியவேயில்லை

நீ உசுப்பிவிட்ட
அந்த ஞாயிறு
இன்னமும் சாயவில்லை;எனக்கு,

என் மேஜை
நாட்காட்டி மட்டும்
ஏனோ ,பொய்யுரைக்கிறது, தினமும்.,

நம்மோடு நடமாடிய
நக்ஷ்த்திரங்கள்
பகலிலும் இப்பொழுது
புலப்படுகிறது.,

நீ பரிமாறிய
மீன் வறுவலின் கைம்மணம்
என்றென்றும் கற்பனையில்.,

நீளக் கூந்தல் எனக்கு
தேவையில்லை - அது
நீயா யிருக்கும் பட்ஷத்தில்.,

நீ கிசுகிசுத்த
என் காதல்
இன்னமும் காதில்.,

நீ சுவாசித்த
தென்றல் பத்திராய்
என் நெஞ்சினுள்.,

உன்னையும்,என்னையும்
தழுவிய நிலவின் குளிர்
ஸ்பரிசம் விலகவேயில்லை;அப்படியே.,

மலர்கள் மலர்ந்தால்
மட்டும்.,
நீ யிருக்கையில் எனக்கு
நீருக்குள் தாகமோ?