எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

குமிழ் மட்டும் காமம்





  • நீர் சூழ்ந்த குமிழென
    ஆசைகள் சூழ்ந்த காதலில்
    நான் மிதந்து வந்தேன்.
  • உனக்கென கொண்டுவருகிறென்,
    கணக்கென கூடாத
    கட்டிலடங்கா காமங்கள்,
    பொத்திக்கொண்டு.
  • மட்டத்தின் மத்தியில்
    பட்டென தெறித்துவிடும்
    இந்த குமிழ்.
  • காற்றோடு கரையும் - என்
    வாசங்கள், - நீ இல்லை
    சுவாசிப்பதற்கு.
  • திசைகள் தேடியலையும் - இந்த
    களவுகள் என்
    கட்டி லில்லை.
  • குமிழ் மட்டும் காமம், - குங்குமச்
    சிமிழ் மாறும் தருணம் - இந்த
    காதல் மூழ்கிவிடும்.

துளித்துவிட்ட மேகம்






  • இவள் என் தேவதை.
    எனினும்,
    துளித்துவிட்ட மேகம்.

  • விரும்பிய நிலம்
    சேரும்
    நீர் அல்லாள்.

  • சேரும் நிலம்
    நிறம் மாறும்
    விதி இவள்தற்று.

  • வெட்கம் கொண்ட
    பெட்டையென,
    கண்ணீர் சிந்தும் மழையில்
    நான் நனைகிறேன்




நதியோடு நாணல்
கொண்ட உறவு
உன்னோடு தோழி
நான்.,

மழைத்துளியின் வெள்ளமென
உன்னை இழுத்துக்கொண்டு நான்,
அப்படியே நிற்கிறாய்
நீ.,

ஓடும் பாதையாவும் பல
நாணல் சேர்த்துக்கொள்வேன்
நிற்கும் நாணல் உன்மேல்
மணல் வாரித்தூரிச்செல்வேன்

நாணல் பல கண்டேன்
உன் போல் ஒன்று
இல்லை தோழி
கானல் நீரும் நீதான்
கண்டு கொண்டேன், வாழி.

ஓடும் நதி நான். உன்னை
தொலைத்துவிட்டேன் தோழி.
தேடும் விழிகள் உனக்கு
தெரிந்தும் கடந்தேன் நான்.


நதியென பிறந்துவிட்டேன்-நீ
நாணலென நிற்பதற்கில்லை
சதிகள் செய்யும் விதிகள் இது.
கதி யறியேன் சேடி.

கடல் கரைந்துவிட்டேன்
என் கண்ணின் நீர்
அறிவார் யார்? சொல்லடி!