Posted by
கேசவன் முத்துவேல்
|
இட்ட முத்ததின் ஈரம் உலர்வதற்குள், தொட்ட விரலின் ஸ்பரிசம் உணர்வதற்குள், பேசும் விழியின் அர்த்தம் புரிவதற்குள், படரும் தேகம் தேடல் தெரிவதற்குள், பற்றும் கரங்கள் நேசம் கட்டுவதற்குள் கலைந்து போகிறது,இந்த பாழாய் போன கனவு. |
Posted by
கேசவன் முத்துவேல்
|
இப்பொழுதெல்லாம் நீ எப்பொழுதாவது தான் ஞாபகத்திற்கு வருகிறாய்… எப்பொழுதெல்லாம் வருகிறாயோ, அப்போழுதெல்லாம் அறைகிறாய். வலிக்கின்றது…
வந்த கணம் தெரிகிறது , சென்ற கணம் புரிவதில்லை ஏன்?
இந்த கனவுகள் என்று தொலையும்? இந்த கணங்கள் எப்படி கலையும்?
உன்னிடம் நான் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை… பொத்திப்பார்க்க, நீ மட்டும் ஏன்? என்னையும்,எழுத்தையும்,? எழுதிப்பார்க்கவா…?
எழுது தோழீ., சில கவிதைகள் பழகு., |
Posted by
கேசவன் முத்துவேல்
|
வார்தைகளை நான் கிறுக்கிய காலம் போய் வார்தைகள் எனை கிறுக்குகின்றன ,இன்று.,
காலச் சக்கரத்தில்சிக்கிக்கொண்டது என் மரபு,புதுக்கவிதை நீ புலனாய்.,
உன் போலவே எல்லையில்லை, தோட்டத்து முல்லையினும் காட்டுக் கொடிகள் காட்சியன்றோ…?
என் விரல்களை ஒடிக்கின்றன, வரிகள்,வலியில்லை. வரிகளை பிரியமட்டும்…
என் எழுத்துக்கள்,என் வரி என் வரிகள்,என் கவிதை என் கவிதை எனதில்லை என்ன செய்வேன்? அய்யகோ…
காத்திருக்கிறேன், ஒரு நாள் கவிதை இப்படி கிறுக்கும்.,
எப்படி இருக்கிறாய்,நீ…? |
Posted by
கேசவன் முத்துவேல்
|
இரவு , நிலவு தென்றல் , மன்றம் தேநீர் , குவளை விழிகள் , மவுனம்
இல்லாத நீ,நான் இழக்காத பிரிவு..,
நீ இருந்திருந்தால் பிரிந்துவிடுவாய் எனும் பயம்
நீ இல்லாவிடத்து எனக்கில்லை தோழீ., |
Posted by
கேசவன் முத்துவேல்
|
மதிய உணவு வேளையில் - உன் மடியில் படர்ந்த மஞ்சள் கைக்குட்டையில் உதட்டு நீர் வழிந்து தெரிக்கையில் சிதறிவிடுகிறது என் மனமும்.., |