எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label தாவணி. Show all posts
Showing posts with label தாவணி. Show all posts

பொங்கல்






பால்காரனையும் பேப்பர்காரனையும்
திட்டியபடி விரட்டிக்கொண்டே
நைட்டியரின் கட்டை இடுக்கில்
கலர்கலராய் புலர்ந்தது,இந்த பொங்கல்.

LPG gas'ன் Pressure குக்கரில்
கொதித்துக் கொண்டிருந்தது.
கதிரவனின் தீட்டுக்குள் , Apartment மூலையில்
Boostடோடு இந்த சர்க்கரைப் பொங்கல்.

குளத்தாங்கரையில் குதிக்கவில்லை,
ஆற்றுக்குள் சைக்கிள் சுத்தவில்லை,
நாலடி பாத்ரூமின் சுவரின்
வெண்ணீர்க் குளியலில் நான்

பனங் கொழுக்கட்டையில்லை
குழி பனியாரமில்லை - பரவாயில்லை
Bakery Cake சுவைதான்.

மாந்தோப்பில்லை, ஆவாரம்பூவில்லை
வாழைத்தோட்டம் போகவில்லை, - அட
வயற்காடே பார்க்கவில்லை - அதற்குள்
பொங்கிவிட்டது, எங்கள் பொங்கல்.,

உங்களோடு பொங்கல் - மிரட்டியது
எங்கள் தொ(ல்)லைக்காட்சி.
"கண்களோடு காதல்" - மும்பை
கதாநாயகி 'கரும்பு'கிறார்.

பட்டணத்து சென்னையட இது.
பொட்டி முன் பொங்கலிடும்.
வெட்டவெளி கண்டதில்லை - மாரில்
கோட்டுசூட்டு பூட்டும் கொள்கைதான் என்னட?

பட்டியால குர்தா தேடும் இவள்
பட்டியலில் இல்லையோ தாவணி?
ஒட்டுபொட்டு வடிவம் கண்டு
சட்டிமுட்டாது இந்த தைப்பொங்கல்.,

வண்ணத்து கோலம் நடுவில்
எண்ணத்து பூசணி மலர்வாள்.
கிண்ணத்து மஞ்சள் எடுத்து
என்னைத் தோடுவார் இங்கு யாரோ?




நதியோடு நாணல்
கொண்ட உறவு
உன்னோடு தோழி
நான்.,

மழைத்துளியின் வெள்ளமென
உன்னை இழுத்துக்கொண்டு நான்,
அப்படியே நிற்கிறாய்
நீ.,

ஓடும் பாதையாவும் பல
நாணல் சேர்த்துக்கொள்வேன்
நிற்கும் நாணல் உன்மேல்
மணல் வாரித்தூரிச்செல்வேன்

நாணல் பல கண்டேன்
உன் போல் ஒன்று
இல்லை தோழி
கானல் நீரும் நீதான்
கண்டு கொண்டேன், வாழி.

ஓடும் நதி நான். உன்னை
தொலைத்துவிட்டேன் தோழி.
தேடும் விழிகள் உனக்கு
தெரிந்தும் கடந்தேன் நான்.


நதியென பிறந்துவிட்டேன்-நீ
நாணலென நிற்பதற்கில்லை
சதிகள் செய்யும் விதிகள் இது.
கதி யறியேன் சேடி.

கடல் கரைந்துவிட்டேன்
என் கண்ணின் நீர்
அறிவார் யார்? சொல்லடி!

பூக்களை எப்போது ஏமாற்றினாய்?






நீ தாவணியிட்டு வந்த
நாளெல்லாம் என்னால்
பூக்களை இரசிக்க முடியவில்லை.

உன்மேல் கோபம் கொண்ட
பூக்கள் என்னைத்தான்
திட்டுகின்றன. மலரை
எப்போது ஏமாற்றினாய்?

ஏகபத்தினி விரதன் வேண்டி
நீ இராமன் காண்கிறாய்.
சீதைக்குதானே தெரியும்,
இராமனின் சஞ்சலம்.
சீதைக்கும் எதிரி - நீ.

நீ தூதுசென்ற காதல் எல்லாம்
பாதி பிரிந்த கதை தெரியுமா?
கானும் கண்கள் யாவும் - உன்னை
கண்டு காதல் கொள்ளும் போதுமா?

போகும் பாதை எங்கும் உன்னை
கால்கள் தொடர்ந்து பிண்ணும்.
காலம் கடக்கும் கணங்கள் - உன்பால்
காதல் வேண்டி நிற்கும்!

நீ நடந்து கொண்டேயிரு.
திரும்பிவிட்டால் - என்
கவிதைகளும் கற்பனை
முடங்கிவிடும்.
தொடர்ந்துவருவேன் - நான்

முதிர் கன்னி


என்ன தான் தாவணியிட்டு
மூடி மறைத்தாலும்
முடிவதில்லை…

அதுவே காட்டிக் கொடுத்துக்
கொக்களித்து சிரிக்கும்
கூடிக் கொண்டிருக்கும்

இவள் வயதை….