எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

பொங்கல்






பால்காரனையும் பேப்பர்காரனையும்
திட்டியபடி விரட்டிக்கொண்டே
நைட்டியரின் கட்டை இடுக்கில்
கலர்கலராய் புலர்ந்தது,இந்த பொங்கல்.

LPG gas'ன் Pressure குக்கரில்
கொதித்துக் கொண்டிருந்தது.
கதிரவனின் தீட்டுக்குள் , Apartment மூலையில்
Boostடோடு இந்த சர்க்கரைப் பொங்கல்.

குளத்தாங்கரையில் குதிக்கவில்லை,
ஆற்றுக்குள் சைக்கிள் சுத்தவில்லை,
நாலடி பாத்ரூமின் சுவரின்
வெண்ணீர்க் குளியலில் நான்

பனங் கொழுக்கட்டையில்லை
குழி பனியாரமில்லை - பரவாயில்லை
Bakery Cake சுவைதான்.

மாந்தோப்பில்லை, ஆவாரம்பூவில்லை
வாழைத்தோட்டம் போகவில்லை, - அட
வயற்காடே பார்க்கவில்லை - அதற்குள்
பொங்கிவிட்டது, எங்கள் பொங்கல்.,

உங்களோடு பொங்கல் - மிரட்டியது
எங்கள் தொ(ல்)லைக்காட்சி.
"கண்களோடு காதல்" - மும்பை
கதாநாயகி 'கரும்பு'கிறார்.

பட்டணத்து சென்னையட இது.
பொட்டி முன் பொங்கலிடும்.
வெட்டவெளி கண்டதில்லை - மாரில்
கோட்டுசூட்டு பூட்டும் கொள்கைதான் என்னட?

பட்டியால குர்தா தேடும் இவள்
பட்டியலில் இல்லையோ தாவணி?
ஒட்டுபொட்டு வடிவம் கண்டு
சட்டிமுட்டாது இந்த தைப்பொங்கல்.,

வண்ணத்து கோலம் நடுவில்
எண்ணத்து பூசணி மலர்வாள்.
கிண்ணத்து மஞ்சள் எடுத்து
என்னைத் தோடுவார் இங்கு யாரோ?

No comments: