Posted by
கேசவன் முத்துவேல்
|
- கட்டிவிட கேட்கிறது உன் கண்கள்
கலைத்துவிட துடிக்கிறது என் கைகள் கட்டில் விலகாத இந்த காலை - என் கனவுகளை களவும் உன் சேலை., - பசியென அழும் சிறுமழலை - நான்
புசியென சொல்லாது பொய்யுரைக்கும் பெண்மை நீ தட்டுச்சோற்றில் தடுமாறும் தாபம் - உன் பட்டுவிரல் கடித்து பசியாரும். - விடைபெறு மட்டும் வேண்டிநிற்கும்
கடைசிபடி உன் காதல் முத்ததிற்கு. கண்ணத்து காதலெல்லாம் காட்சிமாறும் - அது வண்ணத்து பூச்சி கண்டு வழிமாறும். - மறந்துவிட்டு சென்றிருப்பேன் மதிய உணவை
தெரிந்தெடுத்து காத்திருப்பாய் கதவோரம். வாரியணைத்து கட்டிக்கொள்வேன் - வந்து வாசற்கதவில் வழிசொல்வாய் நிதம். மு.கேசவன் 2008-12-25 20:41 |
No comments:
Post a Comment