எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label சிரிப்பு. Show all posts
Showing posts with label சிரிப்பு. Show all posts

என்னதான் பேசுவார்களோ ?






நான் எறியதிலிருந்து
என் முன் ஒரு ஜோடி.,
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.,

என்னதான் பேசுவார்களோ.,
கல்லூரியா யிருக்கும்., - இல்
காதலாகவு மிருக்கும்.

அவன் தோள் சாயவில்லை.,
அவள் கூந்தல் கோதவில்லை.,
என்ன ஜோடி இவர்கள்.,

புகைச்சல் தான் எனக்கு.,ஏன்
புரியவில்லை அவர்கட்கு?
கொஞ்சல் பேச்சும், குறும்பு புன்னகையும்.,

அடுத்த நிலையம் என் முறை.,
இன்னமும் பேசிக்கொண்டே .,

ஒரு கேள்வி
என்னிடம் மிச்சம்.,
எதற்கிந்த நெருக்கமான பயணம்?

அவரவர் கை பேசியில்
யவருடனோ., ஒருமணி
நேரம் வீணாய்?

ஒரு தேவதையின் கண்ணீர்






  • என் முன் ஒரு தேவதை
    அழுவதற்கு ஆயத்தமாகிறாள்
    அழகை இரசிப்பதற்கு நானும்.
  • இளம்தேவதைகள் என்றும் அழகு.
    இவள் இன்னமும்.
    சிரிப்பதற்கு சொல்லாத காரணம்
    அழுவதற்கு என்ன தேடுவாள்?
  • சுயநலம் கொண்ட என்
    கைக்குட்டை அவள்
    கண்ணீருக்கென காத்திருக்கும்.
  • வழிந்தோடும் கண்ணீரில்
    அவள் பெண்மை கொஞ்சி
    மிளிரும்.
  • சிரிக்கும் என் உதடு கண்டு
    பெண் சிணுங்கல்
    விம்மிப் பெருகும்.,
  • சிந்தும் கண்ணீரை - என்
    கைக்குட்டை சிறைகொண்டு
    உள்ளங்கையில் துள்ளும்!

    மு.கேசவன்
    2008-09-25






உண்மை தான்!
ஒரு நல்ல கவிதை,
உன் போலவே
அரிதாகி விட்டது.,

வாசிப்பதும்
யோசிப்பதும்
யாசிப்பதும் - ஏன்
முயற்சிப்பதும் தான்.,

முற்றுப்புள்ளி யின்றி
தொடரவே யாசை
முடிந்துவிட்ட அந்த
கடைசி வரியில்.,

குறுகிய அத்தருணத்தில்
நிறைகள்,குறைகள்
நீடித்திருக்கலாம்-ஆயினும்
குறுகச் சொல்லவில்லை.,

புசித்தால் பசிக்கும்
சுவையின் தாபமிது.
முடியும் பயமின்றி
தொடரும் என்பயணம்.,

.,
.,
.,

விடைபெறு முன்
விம்மிச் சிரிக்கும்
கடைசிக் காட்சிகள்
உனக்கும் போலவே.,