எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label தழுவல். Show all posts
Showing posts with label தழுவல். Show all posts

வந்தான் குகன்





  • அன்னமிடச் செய்தாள் - என்னை
    அண்ணனாக்கிக் கொண்ட வள்
    பின்னும் என்னடி ஊடல்- உன்
    மன்னவன் தேடி வந்த வேளையில்?
  • கைப்பிடித்து வந்தவன் - உள்ளங்
    கால் பிடித்தும் விடுவாள்
    தோள் சாயும் சமயம் - நான்
    தாழ் சேர்ந்து போவேனோ?
  • அன்னை உண்டு அருகில்
    அண்ண னழைப்பான் தொலைவில்
    நங்கைக் குண்டோர் நல்லூர்
    மங்கை மடிசாயும் கரைக்காற்று.
  • தாலிக்கு துடிக்கும் கழுத்து,
    தோழிக்கு துப்பட்டா எதுக்கு?
    நாழிக்கு உண்டோ பொறுமை?
    தாழிக்குள் திமிறும் காதல்.
  • திருநாள் வருடமும் உனக்கு.
    இருநா ளென அதை செய்குவோம்.
    வரும்நா ளெல்லாம் வசந்தமே,
    வருவான் நீயும் விழித்திரு

சுற்றம் என்று சூழும் ?





  • குச்சு கட்டியவன் ஒருவன் கண்
    வச்சு காத்தவன் மருவன் - கை
    பிடிச்சு வந்தவன் இவனே வெண்
    பிச்சி கொண்டு வருவானோ?
  • வெட்கம் வந்த நேரம் - என்
    பக்கம் கூற மறந்தாள் - புது
    சொர்க்கம் கண்ட பின்னும் இவள்
    தர்க்கம் இனி எங்கு வெல்லும்?
  • குத்தும் என மழித்தான்
    குத்தம் என மறுத்தாள்.,
    பத்தும் மிவள் மறக்கவேண்டும்.,
    சுற்றம் என்று சூழுமோ?
  • புன்னை யாக்கி விட்டாள் என்னை
    தன்னை மறக்கும் தமக்கை.
    பின்னும் ஊறும் தமிழ்., ஆதவன்
    கன்னி கூட ஆகும் எட்டு திங்கள்.,


[தமக்கைக்கு.,]
மு.கேசவன்
2008-12-31

பொய்யுரைக்கும் தோழி







தொலைந்து விட்ட உன்
கடிகாரத்தின் நேரத்தில் என்
காலத்தின் சுழற்சி நின்றுவிட்டது

அழைத்துபேசிய மணியேசையில்
ஒளித்து விட்டு வைத்துபோகிறாள்.
யாழையும்,குழலையும்.

நிழலென ஒதுங்கிய மரத்தின்,
அலரென மலரென உதிர்க்கிறாள்.
சுழற்சியின் இளைப்பாறுதல் இவள்.

வளை கொண்ட கரம்
கலை மறந்த தென்ன?
"தலைவன் வருவா னென".

பொய்யுரைக்கும் தோழிகூற்று
நதியுறுஞ்சும் பாலையின்
காமத்தின் அனல்.




நதியோடு நாணல்
கொண்ட உறவு
உன்னோடு தோழி
நான்.,

மழைத்துளியின் வெள்ளமென
உன்னை இழுத்துக்கொண்டு நான்,
அப்படியே நிற்கிறாய்
நீ.,

ஓடும் பாதையாவும் பல
நாணல் சேர்த்துக்கொள்வேன்
நிற்கும் நாணல் உன்மேல்
மணல் வாரித்தூரிச்செல்வேன்

நாணல் பல கண்டேன்
உன் போல் ஒன்று
இல்லை தோழி
கானல் நீரும் நீதான்
கண்டு கொண்டேன், வாழி.

ஓடும் நதி நான். உன்னை
தொலைத்துவிட்டேன் தோழி.
தேடும் விழிகள் உனக்கு
தெரிந்தும் கடந்தேன் நான்.


நதியென பிறந்துவிட்டேன்-நீ
நாணலென நிற்பதற்கில்லை
சதிகள் செய்யும் விதிகள் இது.
கதி யறியேன் சேடி.

கடல் கரைந்துவிட்டேன்
என் கண்ணின் நீர்
அறிவார் யார்? சொல்லடி!

பூக்களை எப்போது ஏமாற்றினாய்?






நீ தாவணியிட்டு வந்த
நாளெல்லாம் என்னால்
பூக்களை இரசிக்க முடியவில்லை.

உன்மேல் கோபம் கொண்ட
பூக்கள் என்னைத்தான்
திட்டுகின்றன. மலரை
எப்போது ஏமாற்றினாய்?

ஏகபத்தினி விரதன் வேண்டி
நீ இராமன் காண்கிறாய்.
சீதைக்குதானே தெரியும்,
இராமனின் சஞ்சலம்.
சீதைக்கும் எதிரி - நீ.

நீ தூதுசென்ற காதல் எல்லாம்
பாதி பிரிந்த கதை தெரியுமா?
கானும் கண்கள் யாவும் - உன்னை
கண்டு காதல் கொள்ளும் போதுமா?

போகும் பாதை எங்கும் உன்னை
கால்கள் தொடர்ந்து பிண்ணும்.
காலம் கடக்கும் கணங்கள் - உன்பால்
காதல் வேண்டி நிற்கும்!

நீ நடந்து கொண்டேயிரு.
திரும்பிவிட்டால் - என்
கவிதைகளும் கற்பனை
முடங்கிவிடும்.
தொடர்ந்துவருவேன் - நான்






பூக்காரியின் பேரம் - கைச்
சுண்டலின் காரம்.
இருக்கையின் ஓரம்
நீ ஊட்டுகிறாய்

காலையின் வேகம்,
சாலையின் தாகம்,
காதலின் தேகம் பட்டு - உன்
காரம் இனிக்கிறது.

இளம் Romeoவின்
கல்லூரி Juliet - காதல் மறக்க
உன் விரல் ஸ்பரித்து என்
வெட்கம் பீறிடும்

உன் அருகமையின் எதிர்
என் சலனம் போரிடும்
பலன் அறியேன்!
விரல் கடித்து விளையாடும்
சிறுவன் நான்.

வெட்கம் என்னை தின்னும் நேரம் - உன்
பக்கம் நான் ஒளிந்து கொள்வேன்
மிச்சம் ஒன்று இல்லை - என்
இச்சை எங்கு செல்லும்?சொல்லடி.

முத்தம் ஒன்று கொடுத்துவிட்டேன் - உன்
சத்தம் எல்லாம் அடங்கிவிடும்.
நித்தம் உனக்கு வேண்டுமெனில் - மீண்டும்
உன் விரல் கடித்து விளையாடுவேன்.

உயிரின் சுவாசம் !






உயிரின் சுவாசம் அறியாது
உன் மேனி வாசம் புரியாது - என்
உணர்வுகள் இங்கு இறந்துவிடும்
காதல் அங்கு பிறந்துவிடும்
காதல் இங்கு தொடங்கிவிடும்

மனம் என்றும்
தொடர் சடுகுடு விளையாடும்
மோதல் இங்கே முடிந்துவிடும் - உயிரின்
மோட்சம் இங்கே தொடங்கிவிடும்.

தூக்கம் ஏனோ தொலைந்துவிடும்
துயரம் மட்டும் தொடர்ந்துவிடும்.

ஆற்றல் இங்கே சிதைந்துவிடும்
ஆண்மை இங்கே அடங்கிவிடும்

உயிரும் ஒரு நாள் ஓய்ந்துவிடும்
திருநாள் வந்த
ஒரு தலைக் காதல் பிரிந்துவிடும்..,

நீளக் கூந்தல் தேவையில்லை







உன்னோடு உரையாடிய
அந்த நடுச்சாமம்
எனக்கு விடியவேயில்லை

நீ உசுப்பிவிட்ட
அந்த ஞாயிறு
இன்னமும் சாயவில்லை;எனக்கு,

என் மேஜை
நாட்காட்டி மட்டும்
ஏனோ ,பொய்யுரைக்கிறது, தினமும்.,

நம்மோடு நடமாடிய
நக்ஷ்த்திரங்கள்
பகலிலும் இப்பொழுது
புலப்படுகிறது.,

நீ பரிமாறிய
மீன் வறுவலின் கைம்மணம்
என்றென்றும் கற்பனையில்.,

நீளக் கூந்தல் எனக்கு
தேவையில்லை - அது
நீயா யிருக்கும் பட்ஷத்தில்.,

நீ கிசுகிசுத்த
என் காதல்
இன்னமும் காதில்.,

நீ சுவாசித்த
தென்றல் பத்திராய்
என் நெஞ்சினுள்.,

உன்னையும்,என்னையும்
தழுவிய நிலவின் குளிர்
ஸ்பரிசம் விலகவேயில்லை;அப்படியே.,

மலர்கள் மலர்ந்தால்
மட்டும்.,
நீ யிருக்கையில் எனக்கு
நீருக்குள் தாகமோ?