எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

சரி, நாம் கிளம்புவோம்






மலர்ந்த வெண்முல்லையோ ? பாறையை
பிளந்த கார் பனித்துளியோ? அச்சு
கரிந்த கயல் விழியோ ? - ஆங்கு
பணிந்த யான் , சிறு பரியோ?

சிவந்த இதழ் உனதோ ? - அதை
சிவக்க செய்தது எனத ன்றோ?
பரந்த மார் எனதோ ?- அதில்
படர்ந்த கொடி நீ யன்றோ?

புடவை எது எனக்கு அழகென்கிறாய்
புடவை எல்லாம் அழகை மறைக்குமென
உண்மையை நான் உளறினால்
உனக்கேன் வரும் பொய்க்கோபம்?

கட்டுபுத்தகம் மொத்தம் - என் மேல்
கொட்டி கொண்டு சிரிக்கிறாய் -பாவம்
தட்டு தடுமாறி வீழ்வேன் - உன்மேல்
விட்டு விலகி விளையாடாதே.,

நீ பேச ஆரம்பித்த முதற்சொல்- "சரி,
நாம் கிளம்புவோம்" அழகான பொய்யது.
நாழி கழிந்தது, நாளும் கழிந்தது,
நாம் மாறவில்லை. மீண்டும் பொய்க்கிறாய்
"சரி, நாம் கிளம்புவோம்"


மு.கேசவன்
2009-01-[16…23]

No comments: